Thursday, April 11, 2024

விமர்சனம்: தமிழரசன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ்.என்.எஸ். மூவீஸ் சார்பில் கொளசல்யா ராணி தயாரிக்க, பாபு யோகேஸ்வரன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி, ரம்யா நம்பீசன் உள்ளிட்டோர் நடிப்பில் உருவாகி இருக்கும் தமிழரசன்.

இப்படத்திற்கு இசைஞானி இளையராஜா இசை அமைத்துள்ளார்.

 

விஜய் ஆண்டனி நேர்மையான காவல்துறை அதிகாரி. அதனாலேயே அவரது வேலை பறிபோகிறது. இந்த நிலையில் அவரது மகனுக்கு இதயத்தில் பிரச்சினை ஏற்படுகிறது. தனியார் மருத்துவமனையில் சேர்க்கிறார்கள். அங்கே, இதயமாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் அதற்கு எழுபது லட்ச ரூபாய் செலவாகும் என்கிறார்கள். விஜய் ஆண்டணியால் அவ்வளவு பணம் புரட்ட முடியவில்லை. ஆகவே கெஞ்சுகிறார்கள்.

ஆனால் மருத்துவமனை நிர்வாகம் ஒப்புக்கொள்ளவில்லை.

இந்த நிலையில் விஜய் ஆண்டணி அதிரடி முடிவும், அதன் பிறகு நடந்ததும்தான் கதை.

நாயகன் விஜய் ஆண்டணியின் நடிப்பைப் பற்றி, படத்திலேயே யோகிபாபு சொல்கிறார்.

“எந்த வேசத்தில வந்தாலும் ஒரே மாதிரி மூஞ்சியை வச்சிருப்பானே.. அவன்தானே” என்கிறார்.

இதைவிட விஜய் ஆண்டனியைப் பற்றி சொல்ல ஏதுமில்லை.

அவரது மனைவியாக ரம்யா நம்பீசன் நடித்து இருக்கிறார். பெரிய அளவில் காட்சிகள் இல்லாவிட்டால் சிறப்பான நடிப்பை அளித்து உள்ளார். கணவன் மீது கொண்டிருக்கும் காதல், மகன் நிலையறிந்து ஏற்படும் துக்கம் என அனைத்து வித உணர்வுகளையும் சிறப்பாக வெளிப்படுத்தி இருக்கிறார்.

யோகிபாபு சிரிக்கவைக்க முயற்சிக்கிறார்.

இளையராஜாவின் இசை.

ஒளிப்பதிவு படத்துக்கு பலம்.

கமர்சியல் படமாக உருவாக்கினாலும், அதில் அதிரடியாக ஒரு மெஸேஜை சொன்ன இயக்குநர் பாபு யோகேஸ்வரனை பாராட்டலாம்.

 

- Advertisement -

Read more

Local News