Thursday, April 11, 2024

விமர்சனம் : நான் கடவுள் இல்லை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

எஸ் ஏ சந்திரசேகர். இவரது இயக்கத்தில் சமுத்திரகனி, இனியா, பருத்திவீரன் சரவணன், சாக்ஷி அகர்வால், யுவன் மயில்சாமி உட்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ள திரைப்படம் நான் கடவுள் இல்லை.

வீச்சருவாள் வீரப்பனான சரவணன் சிறையில் அடைக்கப்படுகிறார். இதற்குக் காரணமான  போலீஸ் அதிகாரி சமுத்திரகனி, வழக்கறிஞர் நீதிபதி உள்ளிட்டோரை பழிவாங்க வேண்டும் என தீர்மானிக்கிறார் சரவணன். இதற்காகவே சிறையில் இருந்து தப்புகிறார். ஒரு கட்டத்தில் சமுத்திரகனியின் மகளை கடத்தி விடுகிறார்.

மறுபக்கம் எஸ்ஏ சந்திரசேகர் கடவுள் போல ஏழை எளிய மக்களுக்கு உதவிகளை செய்து வருகிறார். இந்நிலையில்  சமுத்திரகனியின் மகள், சரவணன் தன்னுடைய அப்பாவை கொலை துடிக்கிறார் அவரை காப்பாற்றுங்கள் என லெட்டர் எழுதுகிறார்.

சமுத்திரகனி  –  சரவணன்  யுத்தத்தில் வென்றது யார்,  இந்த பிரச்சனையை எஸ் ஏ சந்திரசேகர் தீர்த்தாரா இல்லையா என்பது தான் கதை.

சமுத்திரகனி போலீஸ் அதிகாரியாக எதார்த்தமான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார்.  சரவணன் வில்லனாக மிரட்டுகிறார்.  சாக்ஷி அகர்வால், இனியா உள்ளிட்டோர் அவர்களின் கதாபாத்திரங்களை அழகாக செய்து இருக்கின்றனர்.

சந்திரசேகர் ஒரு கடவுள் அவதாரம் போல படத்தில் வலம் வருகிறார்.

படத்தின் இசை மற்றும் ஒளிப்பதிவு காட்சிகளுக்கு உயிர் கொடுத்து அழகு சேர்த்துள்ளது. சில இடங்களில் வழக்கமான லாஜிக்கல் தவறுகள் படத்தில் இடம் பெற்றுள்ளது.

மற்றபடி சுவாரஸ்யமான திரைப்படம்.

- Advertisement -

Read more

Local News