Wednesday, September 18, 2024

விமர்சனம்: மாவீரன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

மடோன் அஸ்வின் இயக்கத்தில் மீண்டும் அந்த முயற்சியில் களமிறங்கி உள்ள சிவகார்த்திகேயனுக்கு மாவீரன் கை கொடுத்ததா  கை விட்டதா  என்பதை பார்ப்போம்..

எல்லாவற்றுக்கும் அட்ஜெஸ்ட் செய்துகொள்ளும்  மனநிலையுடன் உள்ள சிவகார்த்திகேயன் மக்களுக்கான ஒரு பிரச்சனைக்காக  அதிரடியாக மாறுவதுதான் கதை.

கூவம் ஓரத்தில் சென்னை பூர்வகுடி மக்கள் வாழ, அவர்களுக்கு  ஹவுஸிங் போர்டு என்கிற பெயரில் புதிய அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டித் தருகின்றது அரசு.. அமைச்சர்.  ஆனால்,  ஊழல் செய்து, மட்டமாக கட்டிடத்தை கட்டித் தர அதில் பாதிப்புகள் ஏற்படுகின்றன. இதை ஹீரோ கண்டுக்காமல் கடந்து சென்று கொண்டிருக்கிறார். இடைவேளை காட்சியில் மக்களின் சார்பாக,  அமைச்சர் – வில்லன் மிஷ்கினை தைரியமாக எதிர்க்கத் துணிகிறார் மாவீரன் சிவகார்த்திகேயன்.

பயந்த சுபாவமாக  இருந்தவன் எப்படி திமிறி எழுகிறான், ஏன் அண்ணாந்து வானத்தை பார்க்கிறான், அவனுக்கு அந்த பலத்தை கொடுத்தது யார்,  அவனுக்கு கேட்கும் குரல் யாருடையது அதன் பின்னணியில் என்ன இருக்கிறது என்பதை காமெடி கலந்து விறுவிறுப்பாக  சொல்லி இருக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின்.

மண்டேலா படத்தில் கிராமத்தில் நடக்கும் அரசியலை நய்யாண்டியாக சித்தரித்து இயக்கி ரசிகர்களை சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த இயக்குநர் அந்த படத்தின் நாயகன் யோகி பாபுவை இந்த படத்திலும் கொண்டு வந்து சிவகார்த்திகேயன் உடன் காமெடி கலாட்டாவில் கோர்த்து விட்டுள்ளார்.

முதல் பாதி முழுக்க சிவகார்த்திகேயன் ரசிகர்களுக்கு பக்காவான காமெடி.. ரசிகர்களை வயிறு குலுங்க டாக்டர் படத்திற்கு பிறகு சிரிக்க வைக்கிறார்.

இயக்கம், பரத் சங்கர் இசை, சிவகார்த்திகேயன், மிஷ்கின் மற்றும் யோகி பாபுவின் நடிப்பு படத்திற்கு பெரிய பாசிட்டிவாக உள்ளது. மேலும், சிவகார்த்திகேயனுக்கு வீரத்தை கொடுத்து மாவீரனாக மாற்றும் அந்த விஜய்சேதுபதியின் குரல் படத்திற்கு பெரிய பிளஸ்.அதே நேரம், முதல் பாதியில் சொல்ல வந்த மையக் கருத்துக்கு முக்கியத்துவம் கொடுக்காமல் காமெடிக்கு முக்கியத்துவம் கொடுத்தது மட்டும்தான் மைனஸ்.

மற்றபடி குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை ரசிக்கும்படி படத்தைக் கொடுத்து இருக்கிறார்கள்.

- Advertisement -

Read more

Local News