Friday, April 12, 2024

திரையரங்குகளைத் திறக்க அனுமதி கேட்டு முதல்வரிடம் கோரிக்கை..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ்நாடு திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவர் திருப்பூர் சுப்பிரமணியன் தலைமையில் திரையரங்க உரிமையாளர்கள் சங்கத்தினர் இன்று சென்னை தலைமை செயலகத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலினை சந்தித்தனர்.

அப்போது கொரோனா தொற்று நோய் காரணமாக மூடப்பட்டிருக்கும் திரையரங்குகளைத் திறப்பதற்கு அனுமதி தரும்படி கேட்டனர். மேலும் முதலமைச்சரின் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயை தங்களது சங்கத்தின் சார்பில் முதலமைச்சரிடம் அளித்தனர்.

தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த திருப்பூர் சுப்ரமணியம், “முதலமைச்சர் நிவாரண நிதியாக எங்களது சங்கத்தின் சார்பில் 50 லட்சத்திற்கான காசோலையை முதலமைச்சரிடம் வழங்கினோம்.

திரையரங்க உரிமையாளர்களின் சிரமத்தை முதல்வரிடம் எடுத்துக் கூறினோம். தியேட்டர்களை விரைவில் திறப்பதற்கு அனுமதி தரும்படி கேட்டுக் கொண்டோம்.  முதல்வர் பணிவுடன் இதைக் கேட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார். திரையரங்குகளை திறக்க முதலமைச்சர் விரைவில் அனுமதி அளிப்பார் என்ற நம்பிக்கை எங்களுக்கு உள்ளது.

அரசு அளிக்கும் வழிக்காட்டு நெறிமுறைகளை பின்பற்றி திரையரங்குகளைத் திறக்க தயாராக நாங்கள் தயாராக உள்ளோம். இந்தியாவிலேயே குறைவான கட்டணத்தோடு திரையரங்குகள் இயக்குவது தமிழகத்தில் மட்டும்தான். இந்தக் கட்டணம் போதுமானதாக உள்ளது.

திரையரங்குகளின் உரிமத்தை விரைவில் புதுப்பித்து தர முதலமைச்சரிடம் கோரிக்கை வைத்துள்ளோம். நிச்சயம் இதனைச் செய்து தருவதாக முதல்வர் உறுதியளித்துள்ளார்…” என்றார் திருப்பூர் சுப்ரமணியம்.

- Advertisement -

Read more

Local News