Wednesday, November 20, 2024

எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கும் ‘ரத்தம்’ படத்தின் டீசர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்ஃபினிட்டி ஃபிலிம் வென்சர்ஸ் வழங்கும் சி.எஸ். அமுதன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் ‘ரத்தம்’ பட டீசர் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.

பாக்ஸ் ஆபிஸில் நடிகர் விஜய் ஆண்டனியின் மார்க்கெட், நகைச்சுவை பாணியில் இருந்து தீவிரமான இன்வஸ்டிகேஷன் கதைக் களத்துக்குள் புகுந்திருக்கிறார் இயக்குநர் சி.எஸ்.அமுதன்.

இது மட்டுமல்லாது இந்தப் படத்தில் நடித்திருக்கும் ரம்யா நம்பீசன், மஹிமா நம்பியார் மற்றும் நந்திதா ஸ்வேதா உள்ளிட்ட திறமையான நடிகைகள் மற்றும் மேலும் பல சுவாரஸ்யமான விஷயங்கள் இந்தப் படத்தின் எதிர்பார்ப்புகளை பார்வையாளர்கள் மத்தியில் ஏற்படுத்தியுள்ளது.

இந்த விஷயங்களையே தற்போது வெளியாகியுள்ள படத்தின் டீசரும் மீண்டும் ஒரு முறை உறுதிப்படுத்தியுள்ளது.

90 விநாடிகள் ஓடக் கூடிய இந்த டீசரில் பார்வையாளர்களை ஆச்சரியப்படுத்தும் வகையில், தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குநர்களான வெற்றிமாறன், வெங்கட் பிரபு மற்றும் பா.இரஞ்சித் ஆகியோர் படத்தின் கதையோட்டத்தை சொல்லியபடி பார்வையாளர்களை இதன் வலுவான காட்சிகளுக்குத் தயார்படுத்துகிறார்கள். குறிப்பிடத்தக்க வகையில், இந்த அனைத்து விஷயங்களும் திரைப்படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்துள்ளன.

மேலும் இந்த டீசர் வெளியான சில மணி நேரங்களிலேயே 10 லட்சம் பார்வைகளைப் பெற்றது படக் குழுவினரை பரவசத்தில் ஆழ்த்தியுள்ளது.

படத்தின் ஆடியோ, டிரெயிலர் வெளியீடு மற்றும் வெளியாகும் தேதி ஆகியவற்றை படக் குழு விரைவில் அறிவிக்கும்.

- Advertisement -

Read more

Local News