இயக்குநர் விக்ரம் சுகுமாரனின் இயக்கத்தில், சாந்தனு பாக்யராஜ் நடிக்கும், ‘இராவணக் கோட்டம்’ படத்தின் படப்பிடிப்பு நிறைவடைந்தது.!
விக்ரம் சுகுமாரன் எழுதி இயக்கியுள்ள, இந்த ‘இராவணக் கோட்டம்’ திரைப்படத்தை Kannan Ravi Group சார்பில் தயாரிப்பாளர் கண்ணன் ரவி தயாரித்துள்ளார்.
சாந்தனு பாக்யராஜ் மற்றும் ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் முதன்மை பாத்திரங்களில் நடித்துள்ளனர்.
மேலும் ‘இளைய திலகம்’ பிரபு, இளவரசு, ‘குக் வித் கோமாளி’ தீபா, அருள்தாஸ், சுஜாதா ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜஸ்டின் பிரபாகரன் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார்.

இயக்குநர் விக்ரம் சுகுமாரன் படம் குறித்துப் பேசும்போது, “படக் குழுவிலுள்ள அனைவருக்குமே இது ஒரு முக்கியமான திரைப்படம், எங்கள் கனவு படைப்பு மிக அழகாக உருவானதில் மகிழ்ச்சி அடைகிறேன்.
இந்தப் படத்தில் சாந்தனு பாக்யராஜ் மிகத் திறமையான நடிப்பை வெளிப்படுத்தியுள்ளார். இந்த திரைப்படத்தில் ஒவ்வொரு நடிகரும் தொழில் நுட்பவியலாளர்களும் முழு அர்ப்பணிப்புடன் கடுமையான உழைப்பை வழங்கியுள்ளனர். இத்திரைப்படம் சினிமா ரசிகர்களைப் பெரிதும் கவரும் என உறுதியாக நம்புகிறேன்…” என்றார்.