Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையிலான அணி வேட்பு மனு தாக்கல் செய்தது..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

அடுத்த மாதம் நடக்கவிருக்கும் தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தேர்தலில் பிரபல தயாரிப்பாளரான, தேனாண்டாள் பிலிம்ஸ் முரளி ராமசாமி தலைமையில் தயாரிப்பாளர்களின் நலம் காக்கும் அணி போட்டியிடுகிறது.

இந்த அணியின் சார்பில் தலைவராக முரளி ராமசாமி போட்டியிடுகிறார்.

கெளரவச் செயலாளர்கள் பதவிக்கு இராதாகிருஷ்ணனும், கே.ஜே.ஆர்.ராஜேஷூம் போட்டியிடுகின்றனர்.

பொருளாளராக சந்திரபிரகாஷ் ஜெயின் போட்டியிடுகிறார்.

துணைத் தலைவர்களாக சிவசக்தி பாண்டியன், ஆர்.கே.சுரேஷ் இருவரும் போட்டியிடுகின்றனர்.

இன்று காலை இந்த அணியினர் மொத்தமாக தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்திற்கு வந்து தங்களது வேட்பு மனுக்களை தாக்கல் செய்தனர்.

பின்பு நடந்த பத்திரிகையாளர் சந்திப்பில் பேசிய தயாரிப்பாளர் முரளி ராமசாமி, “சிறிய பட்ஜெட் தயாரிப்பாளரின் நலன்களைக் காப்பாற்ற வேண்டித்தான் நாங்கள் தேர்தலில் நிற்கிறோம். எங்களது அணி வெற்றி பெற்றால் முதல் விஷயமாக நின்று போயிருக்கும் உறுப்பினர்களுக்கான நலத் திட்ட உதவிகளை தொடர்ந்து வழங்குவோம்.

முந்தைய நிர்வாகத்தில் நடந்த பண மோசடி, நிர்வாகக் குளறுபடிகளுக்கான சட்டப்பூர்வமான நீதியை நாங்கள் பெற்றுத் தருவோம்.

நடப்பு தயாரிப்பாளர்கள் சங்கத்துடன் இணைந்து திரையிடல் கட்டணப் பிரச்சினையை எதிர்கொண்டு அதைத் தீர்க்க முயல்வோம்.

ஓடிடி நிறுவனங்களுடன் கலந்து பேசி சின்ன பட்ஜெட் திரைப்படங்களையும் வாங்க வைப்போம்..” என்று தெரிவித்தார்.

- Advertisement -

Read more

Local News