போனிகபூரை பதறவைத்த லவ் டுடே!

சமீபத்தில் வெளியாகி  அதிரி புதிரி வெற்றி பெற்ற ’லவ் டுடே’ படத்தின் இந்தி ரீமேக் உரிமையை, பிரபல இந்தித் திரைப்பட தயாரிப்பாளர் போனிகபூர் வாங்கி இருப்பதாகவும் இந்த படத்தில் பிரதீப் ரங்கநாதன் கேரக்டரில் வருண் தவான் நடிக்க இருப்பதாகவும் ஒரு தகவல் உலவியது.

மேலும் இந்த படத்தை தமிழில் இயக்கிய பிரதீப் ரங்கநாதன் ஹிந்தியிலும் இயக்குவார் என்றும் செய்திகள் வெளியானது.இந்த நிலையில் போனி கபூர் தனது ட்விட்டர் பக்கத்தில் “ ’லவ் டுடே’ படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை நான் வாங்கியிருப்பதாக வெளிவந்திருக்கும் தகவல் உண்மைக்கு புறம்பானது. இந்த தகவலை யாரும் நம்ப வேண்டாம்” என்று  தெரிவித்துள்ளார்.

ஆகவே, லவ் டுடே படத்தின் ஹிந்தி ரீமேக் உரிமையை குறித்த வியாபாரம் இன்னும் நடைபெறவில்லை என்பது வெளியாகி இருக்கிறது.