Wednesday, November 20, 2024

மந்திரவாதியைக் கண்டு பயந்த பிரியா பவானி ஷங்கர்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தொலைக்காட்சி  செய்தி வாசிப்பாளர், தொடர் நடிகை, நிகழ்ச்சி தொகுப்பாளர் என்று சின்னத்திரையில் வலம் வந்த பிரியா பவானி ஷங்கர், “மேயாத மான்” திரைப்படத்தில் கதாநாயகியாக அறிமுகமாகி, தற்போது ஏராளமான படத்தில் நடித்துக் கொண்டு இருக்கிறார்.

இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், “பிரபல தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக சேர்ந்தேன்.  முதல் நாள் செய்தி வாசிப்பதற்காக அரங்கத்தில் அமர்ந்திருந்தேன்.  அப்போது ஒரு சாமியார் அந்த அரங்கத்தில் ஆங்காங்கே தண்ணீர் தெளித்தபடி இருக்க,  என் முகத்திலும் தண்ணீர் தெளித்திருக்கிறார்.

எனக்கு பயமாகப் போய்விட்டது.  அங்கிருந்த கேமரா மேன்னிடம் “என்ன பண்றாங்க?” என கேட்டபோது அவர் “தீய சக்தி அண்டாமல் இருப்பதற்காக இப்படி செய்றாங்க” என கூறினாராம்.

“நான் முதல் நாள் செய்தி வாசிக்கப்போறேன். என்னத்தான் தீய சக்தின்னு சொல்லிட்டாங்களோ” என பயந்துவிட்டேன்” என்று காமெடியாக மலரும் நினைவுகளைப் பகிர்ந்துகொண்டார் பிரியா பவானி சங்கர்.

- Advertisement -

Read more

Local News