பல வருடங்களுக்கு முன்பே சேவல் என்கிற படம் மூலம் தமிழ் திரையுலகின் றிமுகமானார் பூனம் பஜ்வா. பிறகு, ஜீவாவுக்கு ஜோடியாக நடித்த தெனாவுட்டு திரைப்படம் மூலம் பரவலான கவனத்தைப் பெற்றார்.
சமீபத்தில் ஒரு பேட்டியில், “ஒரு முறை பெங்களூருவில் இருந்து ரயிலில் சென்னைக்கு வந்துகொண்டு இருந்தேன். எதிர் இருக்கையில் இருந்த ஒரு இளம் தம்பதி இருவர் என்னிடம் அன்பாக பேசி வந்தார்கள். இடையில் வந்த நிறுத்தத்தில் அவர்கள் இறங்கிவிட்டன்.
பிறகுதான், அவர்கள் ஒரு பையை தவறி வைத்துவிட்டுச் சென்றது தெரிந்தது. ஒரு புறம் பாவம் என தோன்றினாலும், இன்னொரு புறம், அதில் என்ன இருக்குமோ என்கிற அதிர்ச்சி இருந்தது. அது, வெடிகுண்டு சம்பவம் ஒன்று நடந்த நேரம்.
ஆகவே அதிர்ச்சியாகவும், பயமாகவும் போய்விட்டது. உடனே ரயில் நடத்துநரை அழைத்து பதட்டத்துடன் விசயத்தைச் சொன்னேன்.
அவர் அந்த பையை திறந்து பார்க்க, உள்ள பழங்களும் பிஸ்கட்டுகளும்தான் இருந்தன. அதன் பிறகுதான் நிம்மதி ஆனேன்” என தனது திகில் அனுபவத்தைக் கூறியிருக்கிறார் பூனம் பஜ்வா.
சில வருடங்கள் கழித்து உடல் எடை கூடி ஆண்ட்டி லுக்கில் சில படங்களில் நடித்து ரசிகர்களுக்கு அதிர்ச்சி கொடுத்தார். அரண்மனை 2, குப்பத்து ராஜா உள்ளிட்ட சில படங்களில் இவரின் தோற்றத்தை பார்த்த ரசிகர்கள் ஆடிப்போனார்கள்.