Tuesday, July 2, 2024

‘பொன்னியின் செல்வன்’ படத்துக்கு விருதுகள் பரிந்துரை

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இன்று மார்ச் 12 ஆம் தேதி ஹாங்காங்கில் நடைபெறவுள்ள கௌரவமிக்க 16வது ஆசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழா நடைபெறுகிறது. இதில், தமிழ் சினிமாவின் பிளாக் பஸ்டர் திரைப்படம் “பொன்னியின் செல்வன் -பாகம் 1” (PS1) – ஆறு விருதுகளுக்கு பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.

சிறந்த திரைப்படம், சிறந்த இசையமைப்பாளர் (ஏ.ஆர்.ரஹ்மான்), சிறந்த தயாரிப்பு கலை இயக்கம் (தோட்டா தரணி), சிறந்த எடிட்டிங் (ஸ்ரீகர் பிரசாத்), சிறந்த ஒளிப்பதிவு (ரவி வர்மன்) மற்றும் சிறந்த ஆடை வடிவமைப்பு (ஏகா லக்கானி) ஆகியவை.

இந்த விழாவில் பங்கேற்று சிறப்பிக்க லைக்கா புரொடக்ஷன்ஸின் தயாரிப்பாளர் சுபாஸ்கரன் அவர்களின் சார்பாக லைக்கா,ஜி்.கே.எம்.தமிழ் குமரன், மெட்ராஸ் டாக்கீஸ் இயக்குநர் மணிரத்னம் சார்பாக நிர்வாக தயாரிப்பாளர் சிவா ஆனந்த், ஸ்ரீகர் பிரசாத், ரவி வர்மன் ஆகியோர் சென்று உள்ளனர்.
விருது குறித்த அறிவுப்புகள் நாளை வெளியாகும்.

- Advertisement -

Read more

Local News