Thursday, April 11, 2024

பொன்னியின் செல்வன் கிளைக்கதை:  தமிழ் தவிர சிங்கள மொழியிலும் உருவானது தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கல்கி எழுதி மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, த்ரிசா உள்ளிட்டோர் நடித்து வெளியான பொன்னியின் செல்வன் பெரும் வெற்றி அடைந்தது தெரிந்த செய்தி.

பொ.செ. ராஜராஜ சோழனின் கதை. ராஜராஜனுக்கு முந்தைய பார்த்திப சோழனின் கதையையும் கல்கி எழுதினார்.  அதுவும் திரைப்படமாக வெளியாகி பெரும் வெற்றியை பெற்றது இந்தத் தலைமுறைக்கு தெரியாது.

பல்லவ மன்னன் நரசிம்மனுக்கு கப்பம் கட்ட மறுக்கும் பார்த்திபன் அவனை எதிர்த்து போரிட்டு வீர மரணமடைகிறான். பின்னர் சோழ நாடு எப்படி பார்த்திபனின் மகன் விக்கிரமனின் பராக்கிரமத்தால் விடுதலை அடைந்தது என்பதே, கல்கி எழுதிய பார்த்திபன் கனவு நாவலின் கதை.

இந்த நாவல், அதே பெயரில் 1960ல் திரைப்பமாக உருவானது.

யேகானந்த இயக்க, ஜெமினி கணேசன், வைஜெயந்தி மாலா, சரோஜா தேவி பிரதான கதாபாத்திரங்களில் நடித்தனர். தமிழ், தெலுங்கு, சிங்கள ஆகிய மொழிகளில் வெளியானது.

இப்படமும் பெரிய வெற்றி பெற்றது!

- Advertisement -

Read more

Local News