இயக்குநர் சுதா கொங்கரா இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிக்கும் திரைப்படம் ‘பராசக்தி’. இதில் ஜெயம் ரவி, ஸ்ரீலீலா, அதர்வா ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். டான் பிக்சர்ஸ் தயாரிக்கும் இப்படத்திற்கு ஜி.வி. பிரகாஷ் இசையமைக்க உள்ளார்.
இந்த திரைப்படம், 1965ஆம் ஆண்டு நடந்த இந்தி திணிப்பு சம்பவங்களை மையமாகக் கொண்டு உருவாக்கப்படுகிறது. இதில் சிவகார்த்திகேயன், கல்லூரி மாணவராக நடிக்கிறார். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம், படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கப்பட்டது.சமீபத்தில், இப்படத்தின் டைட்டில் டீசர் வெளியானது மற்றும் அது சமூக வலைத்தளங்களில் வைரலானது.
தற்போது, சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழகத்தில், படப்பிடிப்பு வேலைகள் நடைபெற்று வருகின்றன. நேற்று தொடங்கிய இந்த படப்பிடிப்பு 5 நாட்கள் தொடரும் எனக் கூறப்படுகிறது. சமீபத்தில், சிவகார்த்திகேயன் மற்றும் அதர்வா ஆகியோரின் முக்கிய காட்சிகள் படமாக்கப்பட்டு வருகின்றன.