Tuesday, August 13, 2024

நூடுல்ஸ் பர்ஸ்ட் லுக் வெளியீடு 

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரோலிங் சவுண்ட் பிக்சர்ஸ் (ROLLING SOUND PICTURES) அருண்பிரகாஷ் தயாரிப்பில் ‘அருவி’ மதன் இயக்கத்தில் உருவாகும் படம்  ‘நூடுல்ஸ்’.

ஹரீஷ் உத்தமன் – ஷீலா ராஜ்குமார்  ஜோடியாக நடிக்கின்றனர். மேலும், ஆழியா க, திருநாவுக்கரசு, மில்லர்,  உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் தோன்றுகின்றனர்.

ஒளிப்பதிவை வினோத் கவனிக்க, படத்தொகுப்பை சரத்குமார் மேற்கொள்ள ராபர்ட் சற்குணம் இசை அமைத்துள்ளார். கலை இயக்குநராக கென்னடி பொறுப்பேற்றுள்ளார்.

நல்ல கதையம்சம் கொண்ட கருத்தாழம் மிக்க படங்களை ரசிகர்களிடம் கொண்டு சேர்ப்பதில் நாட்டம் கொண்ட தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி ‘நூடுல்ஸ்’ படத்தை சமீபத்தில் பார்த்துள்ளார். படம் அவருக்கு மிகவும் பிடித்துப்போக தனது
‘வி ஹவுஸ் புரொடக்சன்ஸ்’ நிறுவனம் மூலமாக இந்தப்படத்தை வெளியிடுகிறார்.

வரும் செப்-1ஆம் தேதி இந்தப்படம் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது.

இப்படத்தின் கதை பற்றியும் படம் உருவான அனுபவம் குறித்தும் இயக்குனர் அருவி மதன் கூறும்போது, “இரண்டே நிமிடங்களில் பரிமாறக் கூடிய உணவு ‘நூடுல்ஸ்’.
இப்படி இரண்டே நிமிடங்களில் நமது தேவையை தீர்க்கக்கூடிய, நமது வாழ்க்கையை மாற்றக்கூடிய சம்பவங்கள் பலருக்கும் பல சமயம் நடந்து கொண்டுதான் இருக்கிறது. அந்த இரண்டு நிமிடத்தில் நாயகன் எடுத்த முடிவால், நாயகி செய்த செயலால் அந்தக் குடும்பமே காவல்துறை அதிகாரி ஒருவரிடம் வசமாக மாட்டிக்கொள்ளும் சூழல் ஏற்படுகிறது” என்றார்.

இந்நிலையில் நூடுல்ஸ் படத்தில் பர்ஸ்ட் லுக் வெளியாகி உள்ளது. இது ரசிகர்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்று உள்ளது.

 

- Advertisement -

Read more

Local News