Saturday, January 16, 2021
Home சினிமா செய்திகள் அமீரின் நடிப்பில் அரசியல் பின்னணியில் உருவாகி வரும் 'நாற்காலி'..!

அமீரின் நடிப்பில் அரசியல் பின்னணியில் உருவாகி வரும் ‘நாற்காலி’..!

‘யோகி’, ‘வடசென்னை’ திரைப்படங்களுக்கு அடுத்ததாக இயக்குநர் அமீர் நாயகனாக நடித்திருக்கும் திரைப்படம் ‘நாற்காலி’.

‘மூன் பிக்சர்ஸ்’ நிறுவனத்தின் சார்பாக தயாரிப்பாளர் ஆதம் பாவா இப்படத்தை தயாரித்துள்ளார்.

‘முகவரி’, ‘காதல் சடு குடு’, ‘தொட்டி ஜெயா’ உள்ளிட்ட திரைப்படங்களை இயக்கிய இயக்குநரான வி.இசட்.துரை ‘இருட்டு’ திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பின்னராக இந்த ‘நாற்காலி’ படத்தினையும் இயக்கியுள்ளார்.

இந்தப் படத்தில் அமீருடன், ‘555’ திரைப்படத்தின் நாயகியான சாந்தினி ஸ்ரீதரன் கதாநாயகியாக நடித்திருக்கிறார். இவர்களுடன் ஆனந்தராஜ், ராஜ்கபூர், இமான் அண்ணாச்சி, மாரிமுத்து, சுப்பிரமணிய சிவா, சரவணஷக்தி, அர்ஜூனன், கோவை பாபு, ஜார்ஜ் விஜய், வினோத் சாகர், ரவி வெங்கட்ராமன், சலீமா உள்ளிட்ட மேலும் பலரும் நடித்துள்ளனர்.

இசை – வித்யாசாகர், ஒளிப்பதிவு – இ.கிருஷ்ணசாமி, படத் தொகுப்பு – ஆர்.சுதர்சன், பாடல்கள் – பா.விஜய், வசனம் – அஜயன் பாலா – க.முரளி, கலை இயக்கம் – ஏ.கே.முத்து, சண்டை இயக்கம் – டான் அசோக், புகைப்படங்கள் – மோதிலால், விளம்பர வடிவமைப்பு – ராஜா, வெங்கடேஷ், மக்கள் தொடர்பு கே.எஸ்.கே. செல்வா.

மறைந்த பாடகர் எஸ்.பி.பாலசுப்பிரமணியம் அவர்கள் கடைசியாக இந்த திரைப்படத்திற்காக “நெஞ்சமுண்டு நேர்மையுண்டு..” என்ற பாடலை பாடியிருக்கிறார்.

மிகுந்த பொருட்செலவில் நடப்பு அரசியல் பின்னணியில் காதலை மையமாகக் கொண்டு பொழுது போக்கு அம்சங்களுடன் தயாரிக்கப்பட்டுள்ள திரைப்படத்தின் படப்பிடிப்பு சிறப்பாக நடந்து நிறைவு பெற்றிருக்கிறது.

தற்போது படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முழு வேகத்துடன் நடந்து வருகிறது. அனைத்து ரசிகர்களும் இன்புற்று மகிழ்ந்து அமரவிருக்கும் வகையில் உருவாகி வரும் இந்த நாற்காலி’ திரைப்படம் வரும் மார்ச் மாதம் திரையரங்கில் வெளியாகவுள்ளது.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

‘மாஸ்டர்’ படக் குழுவுடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடிய நடிகர் விஜய்..!

'மாஸ்டர்' படம் வெற்றியடைந்ததையடுத்து அந்தப் படக் குழுவினருடன் பொங்கல் பண்டிகையைக் கொண்டாடியிருக்கிறார் படத்தின் ஹீரோவான நடிகர் விஜய். இந்த விழா இன்று 'மாஸ்டர்' படத்தின் படப்பிடிப்பு...

“பெரிய தயாரிப்பாளர்களுக்கு மட்டுமே ஓடிடி ஆதரவு கிடைக்கிறது” – தயாரிப்பாளரின் வருத்தம்

இப்போதெல்லாம் ஒரு பெரிய படத்திற்கான பூஜை அறிவிப்பு வரும்போதே அவர்களிடத்தில் வைக்கப்படும் முதல் கேள்வியே.. "இந்தப் படம் தியேட்டருக்கு வருமா.. அல்லது ஓடிடியில் மட்டுமே வெளியாகுமா..?" என்றுதான்..!

இயக்குநர் அனு மோகனை மூன்று முறை ஏமாற்றிய நடிகர் சத்யராஜ்..!

இயக்குநர் அனு மோகன் கோவை பகுதிக்காராக இருந்ததால் சினிமாவுக்கு வருவதற்கு முன்பாகவே நடிகர் சத்யராஜ், கோவை சரளா ஆகியோரை தெரிந்து வைத்திருக்கிறார். ஆர்.சுந்தர்ராஜன் இயக்கிய அத்தனை...

குழந்தைகளுக்காக எடுக்கப்பட்ட ‘சில்லு வண்டுகள்’ திரைப்படம்

சரண்யா 3-D ஸ்க்ரீன்ஸ் என்ற பட நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் தி.கா.நாராயணன் தயாரித்துள்ள படம் ‘சில்லு வண்டுகள்.’ இந்தப் படத்தில் சாரங்கேஷ், அருணாச்சலம், சந்தோஷ் ராஜா,...