Thursday, April 11, 2024

விமர்சனம்: மைக்கேல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரஞ்சித் ஜெயக்கொடி இயக்கத்தில் சந்தீப் கிஷன், விஜய்சேதுபதி, வரலக்‌ஷ்மி சரத்குமார், திவ்யான்ஷா கவுசிக், கெளதம் மேனன், அனுசுயா பரத்வாஜ் உள்ளிட்ட பலர்  நடித்துள்ள படம் மைக்கேல்.

மும்பையில் பிரபல தாதாவாக வலம் வரும் குருவை (கெளதம் மேனன்) எதிர்பாராத விதமாக ஆதரவற்ற இளைஞரான மைக்கேல் காப்பாற்றுகிறார். பின்னர், குரு அவரை டெல்லிக்கு அனுப்பி வைக்க அங்கே தாதா குருவின் மகள் தீராவுக்கும் (திவ்யான்ஷா கவுசிக்) மைக்கேலுக்கும் காதல் உருவாகிறது.

அதன் பின் என்ன நடக்கிறது என்பதுதான் கதை.  

சந்தீப் கிஷன் முரட்டுத்தனமான உடல், அதிரடி சண்டை, காதல் என பல பரிமாணங்களை வெளிப்படுத்தி உள்ளார்.

கெளதம் மேனன், வரலக்‌ஷ்மி சரத்குமார், அனுசுயா பரத்வாஜ் என ஏகப்பட்ட பிரபல நடிகர்கள்  இருக்கிறார்கள். ஆனால் இவர்கள் அத்தனை பேரையும் முந்தி விடுகிறார் விஜய் சேதுபதி.

ஒளிப்பதிவாளர் கிரண் கெளசிக் 90 காலக்கட்டத்தை அப்படியே திரையில் கொண்டு வந்து நிறுத்தி இருக்கிறார்.  அதே போல சாம் சி.எஸ். அமைத்துள்ள பின்னணி இசை  அசத்தல்.

மெதுவான திரைக்கதை   மைனஸ்.

ஆனாலும் அதிரடி சண்டைக் காட்சிகளால் ரசிக்கவைக்கிறது மைக்கேல்.

- Advertisement -

Read more

Local News