நம்பியாரின் உடையைப் பார்த்து டென்ஷன் ஆன எம்.ஜி.ஆர்.!
படத்தில் எம்.ஜி.ஆரும், நம்பியாரும் மோதிக்கொண்டாலும் நிஜத்தில் நல்ல நணபர்கள்.  ஒருமுறை எம்.ஜி.ஆர் தயாரித்து, நடித்த ஒரு திரைப்படத்தில் நம்பியாருக்கு இளவரசர் வேடம் அளிக்கப்பட்டது. அதற்காக அவருக்கு அழகான ஆடை வழங்கப்பட்டது. அந்த ஆடையை அணிந்ததும் நம்பியாருக்கே மிகவும் பிடி
படப்பிடிப்பு துவங்கியது..  நம்பியாரின் உடையை பார்த்த எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை உடனே நிறுத்திவிட்டார்.  எம்.ஜி.ஆர் அணிந்திருந்த ஆடையை விட தன்னுடையை ஆடை அழகாக இருந்ததால்தான் பொறாமைப்பட்டு எம்.ஜி.ஆர் படப்பிடிப்பை நிறுத்திவிட்டார் என நம்பியார் நினைத்தார்.  மேலும், இனி  அந்த உடையை நமக்கு கொடுக்கமாட்டார்கள் என்றும் நினைத்தார்.

இரண்டு நாட்கள் கழித்து படப்பிடிப்பு மீண்டும் நடந்தது. படப்பிடிப்புக்கு வந்த நம்பியாருக்கு அதே உடை அளிக்கப்பட்டது.

பிறகுதான் அவருக்கு விபரம் தெரிந்துள்ளது. ஏனெனில், நம்பியாருக்கு இளவரசர் வேடம் எனில் எம்.ஜி.ஆருக்கு அரசர் வேடம். ஆகவே நம்பியாரை விட தன் கதாபாத்திரத்துக்கு சிறந்த ஆடை வேண்டும் என்றுதான் எம்.ஜி.ஆர். நினைத்திருக்கிறார்.

“எம்.ஜி.ஆர் நினைத்திருந்தால் அந்த ஆடையை எனக்கு கொடுக்காமல் இருந்திருக்க முடியும். ஆனால், அவர் அப்படி செய்யவில்லை. அவரிடம் இந்த நல்ல பண்பை நான் கற்றுக்கொண்டேன்” என நம்பியாரே ஒரு பேட்டியில் தெரிவித்து இருக்கிறார்.