Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

‘மெட்டி ஒலி’ சீரியல் நடிகை உமா மகேஸ்வரி திடீர் மரணம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

‘மெட்டி ஒலி’ சீரியலில் ‘விஜி’ என்ற கதாபாத்திரத்தில் நடித்த நடிகை உமா மகேஸ்வரி இன்று காலமானார்.

சன் டிவியில் கடந்த 2002-ம் ஆண்டு ஒளிபரப்பாகி பெரும் வரவேற்பு பெற்ற சீரியல் மெட்டி ஒலி.

இந்தத் தொடரில் சிதம்பரத்தின் 4-வது மகளாக,  திருமுருகனுக்கு மனைவியாக விஜி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் நடிகை உமா மகேஸ்வரி.

இந்தத் தொடரின் வெற்றிக்குப் பிறகு ‘வெற்றிக் கொடி கட்டு’, ‘உன்னை நினைத்து’, ‘அல்லி அர்ஜுனா’ உள்ளிட்ட படங்களில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். மேலும், ‘ஒரு கதையின் கதை’, ‘மஞ்சள் மகிமை’ உள்ளிட்ட தொடர்களிலும் உமா மகேஸ்வரி நடித்துள்ளார்.

இவருடைய கணவர் முருகன், கால்நடை மருத்துவராக இருக்கிறார். திருமணத்துக்குப் பிறகு எந்தவொரு தொடரிலும் நடிக்காமல், குடும்ப வாழ்க்கையைக் கவனித்து வந்தார்.

சில மாதங்களுக்கு முன்னால் மஞ்சள் காமாலையால் பாதிக்கப்பட்டார் உமா மகேஸ்வரி. அதற்குச் சிகிச்சை எடுத்துக் குணமானார். பின்பு மீண்டும் மஞ்சள் காமாலை பாதிப்பு ஏற்பட்டது. இதற்குத் தொடர்ச்சியாகச் சிகிச்சை எடுத்து வந்தார்.

ஆனால் அந்த சிகிச்சை பலனளிக்காமல் இன்று காலை திடீரென்று மரணமடைந்தார். முருகன் – உமா மகேஸ்வரி தம்பதியினருக்குக் குழந்தை கிடையாது.

உமாவின் மறைவு சின்னத்திரை நடிகர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பலரும் அவருடைய மறைவுக்கு இரங்கல் தெரிவித்து வருகிறார்கள்.

- Advertisement -

Read more

Local News