‘மண்டேலா’ படத்தின் இயக்குநரான மடோன் அஸ்வின் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்து வரும் ‘மாவீரன்’ படத்தின் படப்பிடிப்பு கடந்த வாரம் திடீரென்று நிறுத்தப்பட்டது.
மழையின் காரணமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டதாக படக் குழுவினர் தெரிவித்தாலும், சிவகார்த்திகேயனுக்கும், மடோன் அஸ்வினுக்கும் கதை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையின் காரணமாகத்தான் ஷூட்டிங் நின்றுவிட்டதாக வெளியில் பேசப்பட்டது.
ஆனால் இதை முற்றிலுமாக மறுக்கிறார் இயக்குநர் மடோன் அஸ்வின். இது குறித்து விளக்கமளித்துள்ள இயக்குநர் மடோன் அஸ்வின், “படப்பிடிப்பு நிறுத்தமா? யார் இந்தப் புரளிய கிளப்புனது? அவுட்டோர் ஷுட்டிங் ஆரம்பிக்கிற நேரத்துல செம மழை வந்துருச்சு. இப்ப மழை நின்னதும் திரும்பவும் ஷுட்டிங்கை ஆரம்பிச்சிட்டோம். நம்பிக்கையா, வேகமா வேலை செஞ்சுட்டு இருக்குறப்ப இதைல்லாம் பார்க்கும்போது ரொம்ப கஷ்டமா இருக்கு. இப்போ ஷுட்டிங் சூப்பரா போய்ட்டு இருக்கு. படம் நல்லா வந்துட்டு இருக்கு. சீக்கிரம் தியேட்டருக்கு வரும்” என உறுதியாக தெரிவித்துள்ளார்.