Touring Talkies
100% Cinema

Tuesday, May 13, 2025

Touring Talkies

“கல்யாணம் நடக்கலை; லிவிங் டூ கெதர் ரிலேஷன்ஷிப்பில்தான் இருக்கிறோம்” – நடிகர் பப்லுவின் விளக்கம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

57 வயதான பிரபல சின்னத்திரை நடிகரான பப்லு சமீபத்தில் 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொண்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தி பரவி ஹாட் நியூஸாகிவிட்டது.

57வயதானவர், 24 வயது பெண்ணை திருமணம் செய்து கொள்ளலாமா.. பணம் இருந்தால் என்ன வேண்டுமானாலும் செய்யலாமா என்று இணையத்தில் நடிகர் பப்லுக்கு எதிராக பலவிதமான கருத்துக்களும், கண்டனங்களும் எழுந்தன. அதனால் இது குறித்து நடிகர் பப்லு இப்போது விளக்கம் அளித்துள்ளார்.

பப்லு இது குறித்து அளித்த பேட்டியில், “என் முதல் மனைவி பீனாவையும் நான் காதலித்துத்தான் திருமணம் செய்து கொண்டேன். என் மகன் அகத்துக்கு ஆட்டிசம் குறைபாடு உள்ளது. நானும், எனது மனைவியும் நண்பர்களாக இருந்து திருமணம் செய்து கொண்டதால், எங்களால் வாழ்க்கையில் இணைந்து பயணிக்க முடியவில்லை.

ஒரு கட்டத்தில் எங்களிடையே தினமும் சண்டை வந்ததால், கடந்த 6 வருடங்களுக்கு முன்பு நான் தனியாக வந்துவிட்டேன். ஆனால், மாதத்திற்கு ஒரு நாள் என் மகனை வெளியில்  சென்று சந்திப்பேன். இதனால், எனக்கு மன அழுத்தம், வலி என்று பலவும் உள்ளது. இந்தப் பிரிவால் நான் மனதளவில் உடைந்து போயிருக்கிறேன்.

அத்தோடு மன அழுத்தத்தால் திடீரென நான் இறந்துவிட்டால் என்ன செய்வது என்று பயந்து வீட்டின் கதவு, ஜன்னல் கதவுகளை திறந்தே வைத்துக் கொண்டேதான் தூங்கி வருகிறேன்.

இந்த சூழ்நிலையில்தான் நான் அந்த பெண்ணை சந்தித்தேன். அந்த பெண் என்னை விரும்புகிறாள். எனக்கு பின் தனது மகனை அவள் நிச்சயம் பார்த்துக் கொள்வாள் என்ற நம்பிக்கையும் எனக்கு இருக்கிறது.

வயது என்பது ஒரு நம்பர்தான். நான் இப்போதும் அழகாகவே இருக்கிறேன். “வயதானவனை ஏன்  காதலித்தாய்?” என்று நானும் அந்த பெண்ணிடம் பல முறை கேட்டிருக்கிறேன். அதற்கு அவள், “உங்களின் வயது எனக்கு தெரியவில்லை.. நீங்கள் மட்டும்தான் எனக்கு தெரிகிறீர்கள்” என்கிறாள்.

என் முதல் மனைவி பீனாவிடம், இரண்டாவதாக குழந்தை பெற்றுக்கொள்வது பற்றி பல முறை பேசி இருக்கிறேன். ஆனால், அவர் என் மகனின் நிலைமையை பார்த்து வேண்டாமென்று மறுத்துவிட்டார். ஆனால், இந்த பெண்ணுடன் இரண்டாவதாக குழந்தை பெற்றுக் கொள்ள எனக்கு ஆசை இருக்கிறது.

அதுமட்டுமில்லாமல் நான் 24 வயது பெண்ணை திருமணம் செய்தால் யாருக்கு என்ன பிரச்சனை..? இந்த வயதில்தான் காதல் வர வேண்டும் என்ற கட்டாயம் இல்லையே.!?

என் முதல் மனைவி பீனாவிடம், இந்தப் பெண்னை திருமணம் செய்து கொள்வது பற்றி பேசினேன் அவர், இதற்கு எந்த மறுப்பும் தெரிவிக்கவில்லை. ஆனாலும் நான் காதலிக்கும் அந்தப் பெண்ணுக்கு வயது 24 என்பதுதான் பீனாவிற்கு இதில் இருக்கும் ஒரே வருத்தம்.

கடந்த 6 ஆண்டுகளாக நாங்கள் பிரிந்திருந்தாலும் இதுவரையிலும் விவாகரத்து வாங்காமல்தான் தனித்தனியாக வாழ்ந்து வந்தோம். “இனி நாம் விவாகரத்து செய்து கொள்ளலாம்” என்றார் பீனா. ஏற்கனவே நாங்கள் 6 வருடங்கள் பிரிந்து இருந்ததால், நாங்கள் டைவர்ஸ் விண்ணப்பித்த ஒரு மாதத்திலேயே எங்களுக்கு டைவர்ஸ் கிடைத்துவிட்டது.

இன்னும் எங்கள் இருவருக்கும் திருமணம் நடக்கவில்லை. ஆனால் நாங்கள் இருவரும் இப்போது லிவ்விங் டு கெதர் ரிலேஷன்ஷிப்பில் இருக்கிறோம். கூடிய விரைவில் திருமணம் செய்து கொள்வோம்.அத்தோடு நான் யாருக்கும், எப்போதும் துரோகம் செய்தது இல்லை. அதேபோல இந்த பொண்ணுக்கும் துரோகம் செய்ய மாட்டேன்…” என்று நடிகர் பப்லு தனது இரண்டாவது திருமணம் குறித்து விளக்கம் கொடுத்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News