Touring Talkies
100% Cinema

Saturday, March 15, 2025

Touring Talkies

தங்களுடைய காஸ்ட்யூமர் தயாரித்த திரைப்படத்தை வாழ்த்திய சுஹாசினி-குஷ்பூ ஜோடி..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ஸ்ரீசங்கர நாராயணா சாமுண்டேஸ்வரி மூவிஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் வி.சாய்பாபு தயாரித்திருக்கும் புதிய திரைப்படம் ‘மாயத்திரை.’

இந்தப் படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று காலை சென்னையில் நடைபெற்றது.

இந்த விழாவில் படத்தின் நாயகன் அசோக் குமார். நாயகி ஷீலா ராஜ்குமார், இயக்குநர் சம்பத்குமார் , தயாரிப்பாளர் V.சாய்பாபு மற்றும் சிறப்பு விருந்தினர்களாக நடிகை குஷ்பூ சுந்தர் மற்றும் சுஹாசினி மணிரத்னம் , தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்க தலைவர், செயலாளர், துணைத் தலைவர், பொருளாளர் ஆகியோர் கலந்து கொண்டு விழாவினை சிறப்பித்தனர் .

இந்த படத்தின் இயக்குநரான சம்பத்குமார் பேசும்போது, “இந்தப் படம் ஒரு பேயின் பேரன்பை சொல்லும் படம். இயக்குநர் பாலுமகேந்திரா அவர்கள் அடிக்கடி சொல்லும் வார்த்தை ஒரு கதை அதற்கான கதாபாத்திரங்களை அதுவே தேடிக்கொள்ளும் என்று சொல்வார் .அதன்படிதான் இந்த படம் அமைந்துள்ளது. இந்த படம்ப் ஒரு கதாநாயகியை மையப்படுத்திய படம். ஷீலா ராஜ்குமார் வாழ்ந்திருக்கிறார். அசோக் குமார் என் நீண்ட கால நண்பர். அவர் இந்தப் படத்தில் நடித்து இருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது…” இவ்வாறு பேசினார்.

தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவரான முரளி ராமசாமி பேசும்போது, “ஆடியோ வியாபாரமாகி இசை வெளியீட்டு விழா நடைபெறுவது பார்க்க மகிழ்ச்சியாக இருக்கிறது. அதுவும் வருடத்தின் முதல் நாளில் நடைபெறுவது சிறப்பு. இது ஒரு மற்ற படங்களுக்கு ஒரு ஆரம்பமாக இருக்கும் என கருதுகிறேன்.

இனிமேல், புதுமுகமாக யாரேனும் படம் தயாரிக்க வந்தால் தமிழ் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கம் அவர்களுக்கு ஒரு பக்க பலமாக இருக்கும். தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கம்  புதிய முயற்சிகள் பலவற்றை மேற்கொண்டு வருகிறது. சிறிய படம், பெரிய படம் அனைத்திற்கும் நம்பிக்கையளிக்கும்விதமாக இந்தப் படம் மாபெரும் வெற்றியடைய வாழ்த்துக்கள்…” என்றார்.

நடிகை ஷீலா ராஜ்குமார் பேசும்போது, “இந்த வருடத்தின் முதல் நாள் நல்ல தொடக்கம் என நான் நினைக்கிறேன். இந்த படத்தில் பல அனுபவங்களை நான் கற்றுக் கொண்டேன். தயாரிப்பாளர் என்னை இந்த படத்திற்கு தேர்ந்தெடுத்தது மிகப் பெரிய வாய்ப்பாக நான் கருதுகிறேன். பேய் படம் என்பதால் பெரும்பாலான காட்சிகள் இரவிலேயே எடுக்கப்பட்டது. இப்படத்தில் என்னுடன் பணியாற்றிய அனைவர்க்கும் நன்றி..” என்றார்.

நடிகர் அசோக் குமார் பேசும்போது, “இந்த படத்தில் நடிக்க வாய்ப்பளித்த தயாரிப்பாளர் சாய்பாபு அவர்களுக்கு என் நன்றி . ZERO-ல இருந்து carrier-ஆ ஆரம்பிச்சு வாழ்க்கை செல்கிறது. இந்தப் படத்தில் நடித்த அனைவருக்கும் இந்தப் படம் மூலமாக ஒரு அடையாளம் கிடைக்கும். படத்தின் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..” என்றார்.

தயாரிப்பாளர் சாய்பாபு பேசும்போது, “காஸ்ட்யூம் டிசைனர் ஆக வாழ்க்கையை தொடங்கி, இன்று தயாரிப்பாளராக மாறி இருக்கிறேன். பல உச்ச நட்சதிரங்களுக்கு காஸ்ட்யூம் டிசைனராகப் பணியாற்றி இருக்கிறேன். நான் என்னை போல் சினிமா துறையில் சாதிக்க துடிக்கும் பல பேரை அறிமுகப்படுத்துவேன். இந்த சினிமா என்ன எனக்கு கொடுத்ததோ அதையே திருப்பிக் கொடுப்பேன். இப்படத்தின் இயக்குநர் சம்பத், அசோக், ஷீலா மற்றும் தொழில் நுட்பக் கலைஞர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த விழாவை சிறப்பித்துக்கொடுத்த குஷ்பூ மற்றும் சுஹாசினி அவர்களுக்கும், தயாரிப்பாளர் சங்கத்திற்கும் எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்…” என்றார்.

நடிகை சுகாசினி மணிரத்னம் பேசும்போது, “நான் இன்றுடன் திரையுலகிற்கு அறிமுகமாகி 40 வருடங்கள் ஆகின்றது. வேறு எந்தத் துறையைத் தவிர சினிமா துறையை மட்டுமே நான் மிகப் பெரிய வரப் பிரசாதமாக கருதுகிறேன். அசோக்குமார், ஷீலா இருவரும் படத்தில் நடிப்பது அவர்களுக்கு ஒரு வரப் பிரசாதம். டூ லெட் படத்தில் ஷீலாவின் நடிப்பு மிகப் பிரமாதமாக இருந்தது. இந்தப் படத்திலும் நிச்சயமாக அவரது நடிப்பு பேசப்படும் என்றே நம்புகிறேன்.

இந்த படத்தில் நடித்த அசோக், ஷீலா மற்றும் இயக்குநர் ஆகியோருக்கு மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். படம் மிகப் பெரிய வெற்றி அடையும். நம் எல்லோருடைய ஆதரவும் அன்பையும் இப்படத்திற்கு அளிப்போம்..” என்றார்.

விழாவில் நடிகை குஷ்பூ பேசும்போது, “எனக்கு முதன்முதலாக ஹைதராபாத்தில் மேக்கப் டெஸ்ட் எடுத்தபோது அப்போது என்னுடன் இருந்து எனக்கு உடைகளை செலக்ட் செய்து கொடுத்தவர் இந்தப் படத்தின் தயாரிப்பாளரான சாய்பாபுதான்.

நான் தமிழ்ப் படங்களில் நடிக்க வந்தபோதும் அவர்தான் எனக்கு பல கம்பெனிகளில் காஸ்ட்யூமராக இருந்தார். அவருடைய நல்ல மனதும், பேச்சும், பண்பும் எனக்கு மிகவும் பிடித்துப் போனதால் அப்படியே என்னுடன் வைத்துக் கொண்டேன்.

என்னை படத்தில் நடிக்க வைக்க யார் ஒப்பந்தம் செய்தாலும் நான் அவர்களிடத்தில் சொல்லும் முதல் கண்டிஷனே எனக்கு காஸ்ட்யூமர் சாய் பாபு ஸார்தான். கம்பெனி ஆர்ட்டிஸ்ட் இருந்தாலும் சாய் பாபுவை எனக்காக வேலைக்கு வைத்தால்தான் நடிக்கவே வருவேன் என்று சொல்லிவிடுவேன். அப்படித்தான் பல ஆண் டுகள் என்னுடன் பணியாற்றியவர் அவர்.

அவருக்குத்தான் என்னுடைய டிரெஸ் சென்ஸ்.. நான் எந்த மாதிரி கலர்களை விரும்புவேன். எது மாதிரியான ஆடைகளை அணிவேன்.. என்பதெல்லாம் தெரியும். எப்போது வந்தாலும் பெரிய, பெரிய டிஸைன்ஸ் போட்ட உள்ள புத்தகங்களோடு வருவார். புதிது, புதிதாகத் தைத்துத் தருவார்..

இவர் ஏற்கெனவே ஒரு படத்தைத் தயாரித்திருக்கிறார். இது அவருடைய இரண்டாவது திரைப்படம். இந்தப் படம் அவருடைய நல்ல மனசுக்காக நிச்சயமாக நன்றாக ஓட வேண்டும். அவர் வெற்றி பெற வேண்டும் என்று வாழ்த்துகிறேன்..” என்றார் நடிகை குஷ்பூ.

- Advertisement -

Read more

Local News