ஹிந்தியில், சல்மான் கான் நடிப்பில் ஏ.ஆர். முருகதாஸ் இயக்கிய “சிக்கந்தர்” திரைப்படம், எதிர்பார்த்த அளவிற்கு வெற்றியை பெறாமல் தோல்வி படமாக அமைந்தது. அதனைத்தொடர்ந்து தற்போது சிவகார்த்திகேயன் நடிப்பில் “மதராஸி” திரைப்படத்தை உருவாக்கியுள்ளார் முருகதாஸ். இந்த படம் நிச்சயம் அவருக்கு கம் பேக்காக அமையும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இந்த படத்தில், சூர்யா நடிப்பில் வந்த “கஜினி” திரைப்படத்தின் திரைக்கதை தன்மையும், விஜய்யுடன் நடிப்பில் “துப்பாக்கி” படத்தின் ஆக்ஷன் பாணியும் கலந்து உள்ளன எனவே “மதராஸி” படம் ரசிகர்களுக்கு ஒரு வித்தியாசமான அனுபவத்தை அளிக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மேலும் அவர், “மதராஸி” என்ற சொல்லை வடஇந்தியர்கள் பெரும்பாலும் தமிழர்களை அழைக்க பயன்படுத்துகிறார்கள். இந்த வார்த்தையால் ஏற்படும் சமூக பிரச்சனைகளை மையமாகக் கொண்டே இந்த திரைப்படத்தின் கதை உருவாக்கப்பட்டுள்ளது. இது மட்டுமல்லாது, “கஜினி” படத்தில் போலவே, இந்த படத்திலும் சிவகார்த்திகேயனுக்கு ஒரு முக்கிய பிரச்சனை உண்டு.
அந்த பிரச்சனையை அவர் எவ்வாறு எதிர்கொள்கிறார் மற்றும் அதிலிருந்து எவ்வாறு வெளியே வருகிறார் என்பது படத்தின் முக்கியக் கூறுகளாக இருக்கும் என கூறியுள்ளார் முருகதாஸ். அனிருத் இசையமைத்துள்ள இந்த படம் வரும் செப்டம்பர் 5ஆம் தேதி திரைக்கு வரவுள்ளது.