டி.ராஜேந்தரை கலாய்த்த கே.எஸ்.ரவிக்குமார்!

யு டியுப் சேனல் ஒன்றில்  பத்திரிக்கையாளர் அந்தணன் பழைய சுவாரஸ்யமான சம்பவம் ஒன்றை பகிர்ந்துகொண்டார்.

 “ஒரு முறை இயக்குநர் சங்க தேர்தல் நடந்தபோது டி.ராஜேந்தரும், விசுவும் எதிர் எதிர் அணியில் போட்டியிட்டனர். அப்போது டி.ராஜேந்தர் ஒரு கூட்டத்தில் ‘நான் சினிமாவுக்குள் வருவதற்கு மிகவும் கஷ்டப்பட்டேன். ரோட்டோரத்தில் சாப்பாடு இல்லாமல் பசியோடு படுத்துக்கிடந்தேன்’ என அழுதுகொண்டே பேசினார். அதாவது அனுதாப ஓட்டுக்களை வாங்கிவிடலாம் என்பது அவரது திட்டம்.

அதற்கு கே.எஸ்.ரவிக்குமார் ‘யோவ், இதெல்லாம் என்ன இந்த நாட்டுக்காகவா செஞ்சே..  உனக்காகத்தானே இவ்வளவு கஷ்டப்பட்டே… அதனால இப்போ நல்லா இருக்கே..  மத்தவங்களுக்கு எதுவும் கொடுத்தியா? அவனவன் முன்னேற்றத்துக்கு அவனவன் கஷ்டப்படுறான். இதுல என்ன தியாகம் இருக்கு?’ என்று கேட்டார். அதிலிருந்து தனது கடந்த கால சோக வாழ்க்கை பற்றி பேசுவதையே டி.ஆர். நிறுத்திவிட்டார்”  என்றார் அந்தணன்.