Wednesday, September 18, 2024

காந்தாரா: சாப்டர் ஒன்’ ஃபர்ஸ்ட்  லுக்   நவ.27 வெளியீடு.!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ரிஷப் ஷெட்டி நடித்து, இயக்கிய திரைப்படம் ‘காந்தாரா. கிஷோர், சப்தமி கவுடா பலர் இந்த படத்தில் நடித்திருந்தனர். ஹோம்பாலே பிலிம்ஸ் தயாரித்தது. தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. ரூ.16 கோடி செலவில் எடுக்கப்பட்ட இந்த படம்  ரூ.400 கோடி வசூலித்து சாதனை படைத்தது. இதன் 2-ம் பாகம் உருவாகும் என்று படக்குழு ஏற்கானவே அறிவித்திருந்தது.

இந்நிலையில், இப்படத்தின் முன் தயாரிப்பு பணிகள் நிறைவடைந்ததால் விரைவில் இப்படத்தின் படப்பிடிப்பு தொடங்க இருக்கிறது. இப்படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 27ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது. இப்படத்துக்கு ’காந்தாரா: சாப்டர் ஒன்’ என்று தலைப்பிடப்பட்டுள்ளது. பான் இந்தியா திரைப்படமாக உருவாகும் ‘காந்தாரா 2’ படம் 2024 ஏப்ரல் அல்லது மே மாதம் வெளியாகும் என கூறப்படுகிறது. இந்தப் படம் ‘காந்தாரா’ படத்தின் முன்கதையை அடிப்படையாக கொண்டு உருவாக இருப்பது குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News