Wednesday, November 20, 2024

அடுத்தவர் பாடலுக்காக வருத்தப்பட்ட கண்ணதாசன்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கவிஞர் கண்ணதாசனின் எழுத்தாளுமை அனைவரும் அறிந்ததே. பக்தி, காதல், தத்துவம், சோகம் என பல்வேறு உணர்வுகளை தனது பாடல்கள் வழியே வெளிப்படுத்தியவர் அவர்.

ஆனால் ஒரு பாடலுக்காக அவர் வருத்தப்பட்ட சம்பவமும் நடந்தது.

ஒரு சமயம் காரில் உளுந்தூர் பேட்டை சென்ற கண்ணதாசன், அங்கு ஒரு உணவகத்தில் தன்னுடைய உதவியாளர்களுடன் சாப்பிட்டுக்கொண்டு இருந்தார்.

அப்போது அந்தக் கடையில் ‘மலரை பறித்தாய் தலையில் வைத்தாய், மனதை பறித்து எங்கோ வைத்தாய்’  என்ற பாடல் ரேடியோவில் ஒலித்துக்கொண்டு இருந்தது.

இந்த பாடலைக் கேட்ட கண்ணதாசன்,  ‘இதை எழுதிய கவிஞர் சினிமாவிற்கு புதியவராக இருந்திருப்பார் என்று நினைக்கிறேன்.
அதான் இப்படி வரிகளை போட்டு எழுதியிருக்கிறார். ஆனால் இந்தப் பாடலுக்கு இசையமைத்த இசையமைப்பாளரின் விருப்பத்திற்கேற்பவே இந்தக் கவிஞர் பாடல் வரிகளை எழுதியிருக்க வேண்டும். இந்தப் பாடலில் தலைவன் அப்படி கேட்கும் போது உடனே தலைவி ‘மனதை கொடுத்து மலரை பறித்தேன் ’ இலவசமாக கொடுக்கவில்லை என்று தானே எழுதியிருக்க வேண்டும். அப்படி எழுதியிருந்தால் அந்தக் கவிஞரின் புலமை இன்னும் பரவலாக பேசப்பட்டிருக்கும்.

நானும் முதலில் இப்படித்தான் இருந்தேன், அதன் பின் சினிமாவின் நுணுக்கங்களை கற்றுக் கொண்ட பிறகு தான் என்னால் முழு ஆளுமையுடன் எழுத முடிந்தது’ என்றார்.

பிற கவிஞர்களை போட்டியாக நினைக்காமல் அவர்களும் சிறந்த கவிஞர்களாக வர வேண்டும் என்கிற கண்ணதாசனின் எண்ணம், எவ்வளவு  உயர்வானது.

- Advertisement -

Read more

Local News