கவியரசர் கண்ணதாசன் இயற்றிய ஒவ்வொரு பாடலுக்குப் பின்னாலும் ஒரு சுவாரஸ்ய சம்பவம் இருக்கும்.
அப்படி ஒரு சம்பவம்..
1965 ஆம் ஆண்டு ஏ.பி.நாகராஜன். இயக்கத்தில் சிவாஜி கணேசன், சாவித்திரி, கே.பி.சுந்தராம்பாள், நாகேஷ், டி.எஸ்.பாலைய்யா ஆகியோரின் நடிப்பில் வெளியான திரைப்படம் “திருவிளையாடல்”.
கே.வி.மகாதேவன் இசையில் அனைத்து பாடல்களும் ஹிட்..
பட உருவாக்கத்தின் போது, இயக்குனரான ஏ.பி.நாகராஜன், கவியரசர் கண்ணதாசனை ஒரு நாள் காலை வேளையில் அழைத்து ஒரு பாடலுக்கான காட்சியைக் கூறி அதற்கு பாடல் எழுத கேட்டிருக்கிறார்.
காலை முதல் கண்ணதாசன் சிந்தித்துக்கொண்டே இருந்தார். ஆனால் பாடல் வரிகள் பிறக்கவே இல்லை. நேரம் ஓடிக்கொண்டே இருக்க.. மாலை வேளையும் வந்துவிட்டது.
இதனால் டென்சன் ஆன இயக்குநர், “என்ன கவிஞரே, பாட்டெழுதுறதுக்கு இன்னைக்கு ஒரு நாள் போதுமா? இல்லை இன்னும் ஒரு நாள் வேண்டுமா?” என்று கேட்டார்.
அவ்வளவுதான், உற்சாகமாய் அமர்ந்த கண்ணதாசன், ‘ஒரு நாள் போதுமா.. இன்றொரு நாள் போதுமா…’ பாடல் வரிகளை கொட்ட ஆரம்பித்துவிட்டார்.