Wednesday, February 24, 2021
Home HOT NEWS “கமலின் முட்டாள்தனமான ரசனைதான் கதராடை திட்டம்…” – நடிகை சுசித்ராவின் கோபம்..!

“கமலின் முட்டாள்தனமான ரசனைதான் கதராடை திட்டம்…” – நடிகை சுசித்ராவின் கோபம்..!

“நடிகர் கமல்ஹாசனை முட்டாள்தனமான ரசனை கொண்டவர். எதற்கும் லாயக்கில்லாதவர்.. அருவருப்பான மனிதர்.. மோசமான குணம் கொண்டவர்..” என்றெல்லாம் வசை மாரி பொழிந்துள்ளார் நடிகை சுசித்ரா.

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான பிக்பாஸ் நிகழ்ச்சியின் 4-வது சீஸன் சமீபத்தில் முடிவடைந்தது. இந்த நிகழ்ச்சியை நடிகர் கமல்ஹாசன் தொகுத்து வழங்கியது அனைவருக்கும் தெரிந்தது.

இந்த நிகழ்ச்சியில் வைல்ட் கார்டு எண்ட்ரியாக உள்ளே நுழைந்தார் பாடகி சுசித்ரா. ஏற்கெனவே தனது டிவிட்டர் பக்கத்தில் திரையுலகப் பிரபலங்களின் அந்தரங்க விஷயங்களை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியிருந்தவர் சுசித்ரா என்பதால் அவரது வருகை மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்டது.

ஆனால், பிக்பாஸ் நிகழ்ச்சியில் எந்தவொரு தாக்கத்தையும் ஏற்படுத்தாமல் இருந்ததால் அவர் பாதியிலேயே வெளியேற்றப்பட்டார். கடைசியாக பிக்பாஸ் நிகழ்ச்சி முடிவுற்றபோது நடைபெற்ற நிகழ்ச்சிக்காக திரும்பவும் பிக்பாஸ் அரங்கிற்கு வந்திருந்தார் சுசித்ரா.

அன்றைக்கு நடிகர் கமல்ஹாசன் House of Khaddar என்ற திட்டத்தை அவர்களிடத்தில் அறிமுகப்படுத்தினார். தமிழகத்தில் இருக்கும் நெசவாளர்களின் நலன் கருதி அவர்களது வாழ்வாதாரத்தை மேம்படுத்துவதற்காக இனிமேல் தன் வாழ்க்கையில் அதிக அளவில் கதராடைகளையே பயன்படுத்தப் போவதாகச் சொன்னார் கமல்ஹாசன்.

அதோடு, “அன்றைய நிகழ்ச்சியில் போட்டியில் கலந்து கொண்டவர்கள் அனைவருக்கும் கதரால் உருவான ஆடைகளே வழங்கப்படும்…” என்றும் அறிவித்தார் நடிகர் கமல்ஹாசன்.

“ஆனால் போட்டியாளர்களுக்கு பிக்பாஸ் நிர்வாகம் கொடுத்தது கதராடை அல்ல. சிந்தடிக் துணிதான்..” என்று சுசித்ரா கூறுகிறார். கூடவே நடிகர் கமல்ஹாசனையும் எந்த அளவுக்கு இழிவாகப் பேச முடியுமோ, அந்த அளவுக்குப் பழித்துப் பேசியிருக்கிறார்.

இது குறித்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் எழுதியிருக்கும் சுசித்ரா, “கைப்பாவை குரு என்றால் அது கமல்தான். அவரின் முட்டாள்தனமான பிராண்ட் கதர். கேவலமான ரசனை. எனக்கு கொடுக்கப்பட்டது சிந்தடிக் சட்டை என்பது தெரியும். சிந்தடிக் துணியில் செய்திருந்த உடைகளை அணிய வைத்து அதனை கதர் என்று காண்பிக்க சொன்னார்கள்.

என்ன ஒரு அருவருப்பான மனிதர் கமல்..? மோசமான குணம் கொண்டவர் கமல். கதருக்காக ஒரு ரூபாகூட செலவு பண்ணல. தீந்து போச்சு கணக்கு. அவர் எதற்கும் உதவாத ஆள். கடவுள் இல்லை…” என்று மிகவும் கடுமையாக கமலையும் அவரின் புதிய கதராடை திட்டத்தையும் விமர்சித்துள்ளார் சுசித்ரா.

இந்த விமர்சனங்களுக்கு பலத்த எதிர்ப்புகள் கிளம்பின. “பிக்பாஸ் உள்ளே இருந்தவரையிலும் அவரிடத்தில் பம்மி, பம்ம பேசிவிட்டு இப்போது நிகழ்ச்சி முடிந்ததும் வந்து பாயுறியாம்மா..?” என்று கமல்ஹாசனின் ரசிகர்கள் கடும் தாக்குதலைக் கொடுக்க வேறு வழியில்லாமல் அந்த செய்தியை நீக்கிவிட்டுப் போய்விட்டார் சுசித்ரா.

ஆனாலும், அந்தச் செய்தியின் ஸ்கிரீன் ஷாட்டை எடுத்து வைத்து இப்போது சுசித்ராவை கடுமையாக விமர்சித்து வருகிறார்கள் கமல்ஹாசனின் ரசிகர்கள்.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

- Advertisment -

Most Popular

“என் அம்மா அனுமதித்தால் அவரது சுயசரிதையில் நடிப்பேன்” ஹேமமாலினியின் மகள் ஈஷா தியோல் சொல்கிறார்..!

சீனியர் பாலிவுட் நடிகர்களான தர்மேந்திரா-ஹேமமாலினி தம்பதியினரின் மகளாகிய நடிகை ஈஷா தியோல், இன்று சென்னையில் நடந்த ஒரு விழாவில் கலந்து கொண்டார். அதன் பின்பு பத்திரிகையாளர்களை...

சமூகப் பிரச்சனைகளைப் பற்றிப் பேசும் பேண்டஸி திரைப்படம் ‘மாயமுகி’

டி.பி.கே. இண்டர்நேஷனல் பிலிம்ஸ் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் கே.டில்லி பாபு தயாரித்துள்ள திரைப்படம் ‘மாயமுகி’. தமிழ் மற்றும் தெலுங்கு என  இரு மொழிகளிலும்...

மலையாள நடிகர் இன்னசென்ட்டின் வேடத்தில் யோகிபாபு நடித்திருக்கிறார்..!

இயக்குநர் மணிரத்னம் ஒரு ஓடிடி தளத்திற்காக அந்தாலஜி வகை படம் ஒன்றை தற்போது தயாரித்திருக்கிறார். இந்தப் படத்தில் இடம் பெற்றுள்ள 4 கதைகளை இயக்குநர்கள் பிரியதர்ஷன்,...

OTT வலையில் வீழ்ந்த அடுத்த திரைப்படம் ‘டெடி’

நேற்றுதான் ‘ஜகமே தந்திரம்’ நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் வெளியாகப் போவதாகச் செய்தி வந்தது. இந்தச் செய்தி வந்த 24 மணி நேரத்திற்குள் அடுத்த விக்கெட்டும் வீழ்ந்துவிட்டது....