Thursday, April 11, 2024

‘களத்தூர் கண்ணம்மா’ பற்றி தெரியாத விசயம்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

படிக்காத மேதை, பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும் என மறக்க முடியாத திரைப்படங்களை அளித்ததவர் இயக்குநர் பீம்சிங்.

ஆனால் பலரும் மறந்துவிட்ட விசயம், நடிகர் கமல் அறிமுகமான களத்தூர் கண்ணம்மா படத்தை இயக்கியவரும் இவர்தான். அதாவது கமலை திரையுலகில் அறிமுகப்படுத்தியவர்!

அதுவும் இந்த படத்துக்குள் இவர் வந்தது சுவாரஸ்யமான சம்பவம்.

ஏவி.எம். தயாரித்த இப்படத்தை முதலில் இயக்கியவர் பிரகாஷ்ராவ்தான். ஆனால் ஏனோ ஏவி. மெய்யப்ப செட்டியாருக்கு திருப்தியில்லை.  இயக்குரும்  தான்  விலகிக்கொள்வதாக சொல்லிவிட்டார்.

இதனால் களத்தூர் கண்ணம்மா படம் பாதியில் நின்றது.  பிறகுதான் இப்படத்துக்கு பீம்சிங் ஒப்பந்தமானார்.

எடுத்த வரைக்கும் போட்டுப் பார்த்தார். கதையை இன்னும் செம்மைப்படுத்தினார். வசனங்களில் இன்னும் கூர்மைப்படுத்தினார்.

 ஜெமினியும் சாவித்திரியும் நடித்த அந்தப் படம் மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.

பிரபலமான திரைப்படத்துக்கு, கமல் அறிமுகமான திரைப்படத்துக்கு இயக்குநர் பீம்சிங் பாதியில் தான் வந்தார் என்பது எத்தனை பேருக்குத் தெரியும்?

- Advertisement -

Read more

Local News