Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

‘ஆளவந்தான்’ படம் தோல்வியடையும் என்று முன்கூட்டியே சொன்ன கலைஞர்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமா வரலாற்றிலேயே ஒரு படத்தின் தொடக்க விழாவுக்கு 53 லட்சம் ரூபாய் செலவானது என்றால் அது ஆளவந்தான்’ படத்திற்காகத்தான்.

நடிகர் கமல்ஹாசனின் நடிப்பில் கலைப்புலி எஸ்.தாணு தயாரித்த இந்தப் படத்தின் துவக்க விழா, சென்னை நேரு ஸ்டேடியத்தில் மிகப் பிரம்மாண்டமான செலவில் நடைபெற்றது தமிழ்த் திரையுலகத்தையே பிரமிக்க வைத்தது.

ஆனால் மிகப் பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட இத்திரைப்படம் அந்த அளவுக்கு ஓடாததால் தயாரிப்பாளரான தாணுவுக்கு மிகப் பெரிய பொருளாதாரா நஷ்டத்தைத்தான் கொடுத்தது.

கூடவே இந்தப் படத்தின்போது ஏற்பட்ட கருத்து வேறுபாடுகளால் தயாரிப்பாளர் தாணு, இப்போதுவரையிலும் கமல்ஹாசனுடன் பேசுவதே இல்லை என்பதும் இன்னொரு சோகமான விஷயம்.

ஆனால், இந்தப் படம் நிச்சயமாகத் தோல்வியடையும் என்று படத்தின் துவக்க விழாவுக்கு முன்பேயே ஒருவர் தெரிவித்திருக்கிறார். அவர் தமிழகத்தின் முன்னாள் முதல்வரான கலைஞர் மு.கருணாநிதிதான்.

இது பற்றி தயாரிப்பாளர் தாணு சமீபத்தில் அளித்துள்ள ஒரு பேட்டியில் சொல்லியிருக்கிறார்.

அந்தப் பேட்டியில் தயாரிப்பாளர் தாணு இது பற்றிச் சொல்லும்போது, “ஆளவந்தான்’ படத்தின் தொடக்க விழா அழைப்பிதழை எடுத்துக் கொண்டு கலைஞரிடம் ஆசீர்வாதம் வாங்குவதற்காக, அவரது ஆலிவர் ரோடு இல்லத்துக்குப் போனேன்.

மாடிப் படியில் இறங்கிக் கொண்டே பத்திரிகையை இரண்டு முறை திருப்பிப் பார்த்த கலைஞர், ‘`என்னய்யா, வில்லனா நடிக்கிறாராய்யா?’’ என்றார். ‘`ஒரு கேரக்டர் அண்ணன்; நல்லவன், இன்னொரு கேரக்டர் தம்பி; கெட்டவன் தலைவரே’’ எனச் சொன்னேன். ‘`படம் ஓடாதுய்யா’’ என்றார் கலைஞர். ‘`என்ன தலைவரே இப்படிச் சொல்றீங்க?’’ என்றேன்.

பக்கத்தில் இருந்த ராஜாத்தி அம்மாவும், ‘`தம்பி முதன்முதல்ல வந்து பத்திரிகையைக் கொடுக்குது. வாழ்த்து சொல்லாம இப்படிச் சொல்றீங்களே… இது என்ன நியாயம்..?’’ என்றார். ‘`அட, நான் உண்மையைச் சொல்றேன்மா. ‘நீரும் நெருப்பும்’னு ஒரு படம். எம்.ஜி.ஆர் வில்லனா நடிச்சாரு. படம் ஓடுச்சா…? எப்பவுமே ஒரு ஹீரோவா இருக்கிறவன் வில்லனா நடிக்கக் கூடாதும்மா’’ என்று ராஜாத்தி அம்மாளைப் பார்த்துச் சொன்னவர், என்னிடம் திரும்பி, ‘`நான் எனக்குத் தெரிஞ்சத சொல்றேன்யா… ஆனா, அதை மீறி படம் நல்லா வரட்டும்யா..’’ என்று சொல்லி என்னை வாழ்த்தி அனுப்பினார்…” என்று சொல்லியிருக்கிறார் தயாரிப்பாளர் தாணு.

- Advertisement -

Read more

Local News