Touring Talkies
100% Cinema

Thursday, March 13, 2025

Touring Talkies

“கார்த்தி படத்தில் நடித்ததற்காக வருத்தப்படுகிறேன்!”:  காஜல் அகர்வால்  

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை காஜல் அகர்வால், சமீபத்தில் பிரபல சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்தார்.

அப்போது அவர், “தற்போது நான் உயர்ந்த நிலையில் இருப்பற்கு டவுளின் ஆசி, என்னுடன் பணியாற்றிய தொழில்நுட்பக் கலைஞர்கள், நடிகர்கள், ரசிகர்கள் அனைவருடைய அன்புதான் காரணம்.

முதல் படமான லட்சுமி படத்தில் நடிப்பது சிரமமாக இருந்தது.  பிறகு பழகிவிட்டேன்.  மகதீரா படத்தில் ராஜமவுலி சாரோடு பணியாற்றியது எனக்கு மிகச் சிறந்த அனுபவமாக இருந்தது. துப்பாக்கி படம் எனக்கு மிகவும் பிடித்த படம். விஜய் சார், முருகதாஸ் சாரோடு அந்தப் படத்தில் பணியாற்றியது மறக்க முடியாத அனுபவம். துப்பாக்கி இரண்டாம் பாகம் எடுத்தால் அதில் நிச்சயம் நான் நடிப்பேன்.

அஜித் சார் அற்புதமான மனிதர். அவருடைய சமையலை ஒருநாள் நான் சாப்பிட வேண்டும் என்று விரும்புகிறேன். இந்தியன் 2 படத்தில் கமல் சார், ஷங்கர் சாரோடு பணியாற்றி வருகிறேன். ஷங்கர் சார் இவ்வளவு பெரிய இடத்தை அடைந்தது அவருடைய உழைப்பால் தான் என்பதை நேரில் பார்த்து வியந்து வருகிறேன். கமல் சார் ஒரு லெஜன்ட்” என்றார்.

மேலும் பேசிய அவர், “ஆல் இன் ஆல் அழகுராஜா படத்தில் கார்த்திக்குடன் நடித்தேன். அதில் நான் நடித்த சித்ரா தேவிப்ரியா கதாபாத்திரம் குறித்து அறியாமல் நடித்துவிட்டேன். அது எனக்கு மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியது” என்று தெரிவித்து உள்ளார்.

 

- Advertisement -

Read more

Local News