Touring Talkies
100% Cinema

Sunday, May 18, 2025

Touring Talkies

தைப் பூசத் திருநாளில் வெளியாகும் ‘கபடதாரி’ திரைப்படம்..!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கிரியேட்டிவ்  என்டர்டெயின்மெண்ட் அண்ட் டிஸ்ட்ரிபியூட்டர்ஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் லலிதா தனஞ்செயன் தயாரித்திருக்கும் திரைப்படம் ‘கபடதாரி’.

இந்தப் படத்தில் சிபிராஜ் நாயகனாகவும், நந்திதா ஸ்வேதா நாயகியாகவும் நடித்துள்ளனர். மேலும், நாசர், ஜெயப்பிரகாஷ், ஜே.சதிஷ் குமார், மயில்சாமி மற்றும் சில முக்கிய நடிகர், நடிகைகளும் படத்தில் நடிக்கிறார்கள்.

கலை இயக்குநராக விதேஷ் பணியாற்ற, சில்வா சண்டை காட்சிகளை அமைக்க,  பிரவீன் கே.எல். படத் தொகுப்பு பணியைச் செய்கிறார். சைமன் கே.கிங் இசையமைக்க, பாடல்களை வைரமுத்து மற்றும் கு.கார்த்திக் எழுதுகிறார்கள். ராசாமதி ஒளிப்பதிவு செய்கிறார். வணிகத்தை எஸ்.சரவணன் தலைமையேற்க, நிர்வாக தயாரிப்பு என்.சுப்பிரமணியன் கவனிக்கிறார்.

படத்தின் கதையை எம்.ஹேமந்த் ராவ் எழுத, திரைக்கதையையும் வசனங்களையும் இயக்குநர் மகேந்திரனின் மகன் ஜான் மகேந்திரனும், Dr.கோ. தனஞ்செயனும் ஏற்கிறார்கள். இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி படத்தை இயக்கியிருக்கிறார்.

பொதுவாக ரீமேக் படங்கள் மீது பலத்த எதிர்பார்ப்பும், பல நேரங்களில் முதல் படத்துடன் பெரும் ஒப்பிடலும் நிகழ்ந்து கொண்டே இருக்கும். ஆனால் தமிழில் இந்த கபடதாரி’ திரைப்படம் நிறைய மாற்றங்களை அடைந்துள்ளது. காவலுதாரி’ பார்த்த ரசிகர்களுக்கும் இப்படம் ஒரு புதிய அனுபவமாக இருக்கும்.

இதில் குறிப்பிடத்தகுந்த அம்சம் என்னவெனில் ஒரிஜினல் படத்தின் இயக்குநரும் திரைக்கதை ஆசிரியருமான ஹேமந்த் ராவ் தமிழ்ப் படத்தின் திரைக்கதை உருவாக்கத்தில் முழுதாக பங்கு கொண்டுள்ளார்.

அவரது பார்வையில், தமிழுக்கேற்ற முழுமையான மாற்றங்களை, திரைக்கதையிலும்,  வசனங்களிலும் ஏற்படுத்தியதில் பெரும் பங்காற்றியுள்ளார்.

தமிழ் பதிப்பின் திரைக்கதை அமைப்பை கிரியேட்டிவ் புரடியூசர் G.தனஞ்செயன் அமைத்துள்ளார். அவர்தான் இயக்குநர் ஹேமந்த் ராவ் அவர்களை அழைத்து, அவர் உதவியுடனும், தமிழ்ப் பதிப்பின் இயக்குநர் பிரதீப் கிருஷ்ணமூர்த்தி மற்றும் எழுத்தாளர் ஜான் மகேந்திரடனும் இணைந்து திரைக்கதையை வடிவமைத்திருக்கிறார்.

தமிழ்ப் பதிப்பின் திரைக்கதை ஒரு குழுவாக, அனைவரது பங்களிப்பிலும் மிக சிறப்பாக உருவாக்கப்பட்டுள்ளது.

இந்தப் படம் சென்சாரில் U/A சான்றிதழ் பெற்றுள்ளது.  படத் தயாரிப்பு, படத்தின் விளம்பரம் முதலான படம் பற்றின அத்தனை விசயங்களும், ரசிகர்களை கவரும் வகையில் நிகழ்ந்து வருகிறது.

நடிகர் சூர்யா முதல் ஆஸ்கர் புயல்’ ஏ.ஆர்.ரஹ்மான்வரை தங்கள் ஆதரவு கரம் நீட்டி வெளியிட்ட இந்தப் படத்தின் புரமோக்களும், அனைவரையும் கவர்ந்திழுத்திருக்கும் விஷுவல்களும், இந்தக் கபடதாரி’ படத்தினை இக்காலக்கட்டத்தின் மிக முக்கிய படைப்பாக மாற்றியிருக்கிறது.

வரும் தைப் பூசம் பண்டிகை திருநாளான 2021, ஜனவரி 28 அன்று இத்திரைப்படம் உலகம் முழுவதும் வெளியாகிறது.

- Advertisement -

Read more

Local News