Wednesday, April 10, 2024

“ஜோ” திரைப்பட விமர்சனம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

’ஜோ’ திரைப்பார்வை : தற்செயலாக நாம் யாருக்கோ செய்யும் சிறு உதவி, வேறொரு சந்தர்ப்பத்தில் நமக்கு உதவுகிறது என்கிற நியூட்டனின் மூன்றாம் விதியை அழகாக படம் பிடித்துக் காட்டி இருக்கிறார்கள்.

நாயகன் ரியோ ராஜ் பொறியியல் கல்லூரி மாணவர். அதே கல்லூரியில் நாயகி hero is Rio Raj
Malavika Manojuம் படிக்கிறார். மாளவிகாவை துரத்தி துரத்தி காதலிக்கிறார் ரியோ ராஜ். ஒரு கட்டத்தில் அவரும் காதலிக்க… இருவரும் காதல் வானில் சிறகடித்து பறக்கிறார்கள்.

கல்லூரி படிப்பு முடிந்து இருவரும் அவரவர் ஊருக்கு சென்று விடுகின்றனர். ஆனால் காதல் அப்படியே தொடர்கிறது. ஒரு கட்டத்தில் இவர்கள் காதல் இரு வீட்டாருக்கும் தெரிய வருகிறது.

கேரள பெண்ணான மாளவிகா வீட்டில், தமிழ்நாட்டைச் சேர்ந்த இளைஞனை காதலிப்பதா என எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

காதல் தோல்வியால் நாயகி மாளவிகா தற்கொலை செய்து கொள்கிறார்.

நாயகன் ரியோ ராஜ், விரக்தியில் குடிக்கு அடிமையாகிறார். அவரது மனநிலையை மாற்ற, இன்னொரு நாயகி பவ்யாவை திருமணம் செய்து வைக்கின்றனர், பெற்றோர்.

திருமணத்திற்குப் பிறகு தம்பதிக்குள் ஏழாம் பொறுத்தம். எப்போதும் சண்டை.

ரியோவுக்கோ காதல் தோல்வியில் இருந்து மீள முடியாத விரக்தி. பவ்யாவுக்கோ அவரது இளம் வயதில் ஏற்பட்ட ஒரு கசப்பான அனுபவம்.

ஒரு கட்டத்தில், இரண்டு பிரச்சினைக்கும் தீர்வு காண களம் இறங்குகிறார் ரியோ.

அதன் பிறகு என்ன ஆனது என்பதே கதை.

இயல்பாக துவங்கும் கதை, நாயகன் – நாயகி அறிமுகம்.. காதல் என்று நந்தவனத்துக்குள் சென்றவுடன் ரசிக்கவைக்கிறது. காதல், மோதல், ஊடல் என அத்தனை சுவாரஸ்யம்.

அதே நேரம், இடைவேளை நேரத்தல், நம்மை அதிரவைக்கிறது.
இரண்டாம் பாதி இன்னொரு கோணத்தில் துவங்கி, மனதிற்கு உற்சாகத்தை ஏற்படுத்துகிறது. அற்புதமான கிளைமாக்ஸ்.

வாழ்வில் ஒரு தோல்வி வந்தால் அது நல்லதுக்கே என்ற எனர்ஜயை அளித்துள்ளார் ர் இயக்குநர் ஹரிஹரன் ராம்.

நாயகன் ரியோ ராஜ் வழக்கத்துக்கு தான் ஒரு நல்ல நடிகர் என்பதை இந்த படம் மூலம் நிரூபித்திருக்கிறார். இவருடன் சரிசம போட்டியாளராக சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார் நடிகை மாளவிகா மனோஜ். இரண்டாம் பாதியில் வரும் நாயகி பவ்யாவும் அவருக்கு கொடுத்த கதாபாத்திரத்தை சிறப்பாக செய்திருக்கிறார்.

ரியோவின் நெருங்கிய நண்பராக வரும் அன்பு தாசனை காட்டிலும் இன்னொரு நண்பராக வரும் நடிகர் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தி இருக்கிறார். சில காட்சிகளே வந்தாலும் அனுபவமான நடிப்பில் நெகிழ செய்துள்ளார் மூத்த நடிகர் சார்லி. இவரது கதாபாத்திரம் பிற்பகுதி கதைக்கு நன்றாக ஒத்துழைப்பு கொடுத்துள்ளது. மற்றபடி முக்கிய கதாபாத்திரத்தில் வரும் அனைவருமே அவரவர் வேலையை சிறப்பாக செய்திருக்கின்றனர்.

இசையமைப்பாளர் சித்து குமார் பேச்சிலர் படத்திற்கு பிறகு இந்த படத்தில் சிறப்பான இசையை கொடுத்து மெய்சிலிர்க்க வைத்துள்ளார். இந்தப் படத்தின் இன்னொரு நாயகனாக இசை மாறி இருக்கிறது. நாயகன் நாயகி சம்பந்தப்பட்ட டூயட் பாடல் காட்சி சிறப்பாக அமைந்திருக்கிறது. அதேபோல் பின்னணி இசையையும் பல இடங்களில் சிறப்பாக கொடுத்து நம்மை நெகிழ செய்திருக்கிறார். பல இடங்களில் கண் கலங்கவும் வைத்திருக்கிறார். ராகுல் ஒளிப்பதிவில் கல்லூரி சம்பந்தப்பட்ட காட்சிகள் சிறப்பாக காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அதேபோல் காதல் காட்சிகளும் நேர்த்தியாக படமாக்கப்பட்டுள்ளது. நாம் அனைவரின் வாழ்விலும் காதல் தோல்வி என்பது ஏதோ ஒரு நேரத்தில், ஏதோ ஒரு வகையில் நம்மை கடந்து சென்று இருக்கும். அதற்காக நாம் நம் வாழ்வை தொலைத்துக் கொள்வதில் எந்த பலனும் இல்லை. அதைத் தாண்டி நாம் தெரிந்தோ தெரியாமலோ செய்த சில பல நன்மைகள் நம்மை ஏதோ ஒரு வகையில், நாம் தடுமாறும் நேரத்தில் நம்மை காத்து சரியான பாதைக்கு அழைத்து செல்லும் என்ற நம்பிக்கையை இந்த படம் கொடுத்திருக்கிறது. அந்த வகையில் ஜோ அனைவரையும் நெகிழ செய்து நம்பிக்கை கொடுத்திருக்கிறான்.

மொத்தத்தில் சிறப்பானதொரு படம்.

- Advertisement -

Read more

Local News