Wednesday, April 10, 2024

’ஜப்பான் – ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’பாக்ஸ் ஆஃபீஸ்  வசூல்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

ராஜுமுருகன் இயக்கத்தில் கார்த்தியின் 25-ஆவது படமாக ரசிகர்களின் எதிர்பார்ப்புடன் வெளியான ‘ஜப்பான்’ முதல் நாளில் ரூ.4.15 கோடியை வசூலித்ததாக தகவல் வெளியானது. ராகவா லாரன்ஸ், எஸ்.ஜே.சூர்யா நடிப்பில், கார்த்திக் சுப்பராஜ் இயக்கிய ’ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ படத்தின் முதல் நாள் வசூல் ரூ.3 கோடி என கூறப்படுகிறது. விளம்பரம், புரமோஷன் மற்றும் எதிர்பார்ப்பு காரணமாக முதல் நாளில் கார்த்தியின் ‘ஜப்பான்’ திரைப்படம் வசூலில் முன்னேறியிருந்தது. அதன் பின்னர் இரண்டு படங்களின் விமர்சனங்களும் வெளியான நிலையில், இரண்டாவது நாள் ‘ஜப்பான்’ ரூ.3.10 கோடியுடன் பின்தங்க, ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.5.21 கோடியுடன் கூடுதல் வசூலை எட்டியிருக்கிறது.

தீபாவளி நாளான ஞாயிற்றுக் கிழமை ‘ஜப்பான்’ ரூ.4 கோடியையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.7 கோடியையும் வசூலித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஒட்டுமொத்தமாக 3 நாட்களின் ‘ஜப்பான்’ ரூ.10 கோடிக்கும் அதிகமான வசூலையும், ‘ஜிகர்தண்டா டபுள் எக்ஸ்’ ரூ.15 கோடிக்கும் அதிகமான வசூலையும் கலவையான விமர்சனங்களை பெற்றுவரும் ஜப்பான்’ வசூலில் பின்தங்கியிருக்கிறது. இரண்டு படங்களும் ரூ.30-40 கோடி பட்ஜெட்டுக்குள் உருவாகியுள்ளதது குறிப்பிடத்தகது.

 

 

- Advertisement -

Read more

Local News