கமல் நடிகராக காரணம் ஜெய்சங்கர்!

ஐந்து  வயதில், களத்தூர் கண்ணம்மா படத்தில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமான கமல், இன்று உலக நாயகனாக பிரமிக்க வைக்கிறார்.  

அதே நேரம், நாயகனாக நடிப்பதற்கு முன், இடைப்பட்ட காலத்தில் ஒரு நடன இயக்குனரிடம் உதவியாளராக பணிபுரிந்தார்.   அப்போது எம்.ஜி.ஆர், ஜெயலலிதா, ஜெய்சங்கர், சிவாஜி என பல நடிகர்களுக்கு நடனம் சொல்லி கொடுத்தவர் கமல்.

ஒருமுறை ஜெய்சங்கர் நடிக்கும் படத்தில் கமல் பணிபுரிந்தார். அப்போது ஜெய்சங்கர் ‘திரைக்கு பின்னாலேயே இருக்காதே.. நீ நல்ல  நடிகன். திரைப்படத்தில் நடி’ என ஆலோசனை கூறினார்.

இந்த நிலையில்தான், நடிப்பதற்காக இயக்குநர் கே.பாலசந்தர் கமலை அழைத்தார். அவரும் ஒப்புக்கொண்டார்.  ஆக, கமல் நடிராக வந்ததற்க ஜெய்சங்கர் முக்கிய காரணம்.

இதை கமலே ஒரு பேட்டியில் கூறியிருந்தார்.