தெலுங்கு திரை உலகின் முன்னணி நடிகரான நாக சைதன்யா, ‘தண்டேல்’ பட வெற்றிக்குப் பிறகு தனது 24-வது திரைப்படத்தில் நடித்து வருகிறார். தற்போது தற்காலிகமாக ‘என்சி 24’ என அழைக்கப்படும் இந்தப் படத்தை கார்த்திக் தண்டு இயக்குகிறார். ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினி சித்ரா மற்றும் ‘புஷ்பா’ திரைப்பட இயக்குனர் சுகுமாரின் நிறுவனமான ‘சுகுமார் ரைட்டிங்ஸ்’ இணைந்து இந்தப் படத்தைத் தயாரிக்கின்றன.

இந்தப் படத்தில் கதாநாயகியாக மீனாட்சி சவுத்ரி நடிக்கவிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்தப் படம் ஒரு புராணக் கதையை மையமாகக் கொண்டு உருவாகி வருகின்றது. இப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் துவங்கியுள்ளது.
இந்நிலையில், நாக சைதன்யா மற்றும் மீனாட்சி சவுத்ரி ஆகியோரின் கதாபாத்திரங்கள் குறித்து தகவல் வெளியாகியுள்ளது. அதன்படி, நாக சைதன்யா இப்படத்தில் ஒரு புதையல் வேட்டைக்காரராகவும், மீனாட்சி சவுத்ரி ஒரு தொல்பொருள் ஆராய்ச்சியாளராகவும் நடித்துவருகின்றனர் என்று கூறப்படுகிறது.