ராயன் படத்திற்கு பிறகு தனுஷ், இயக்குனராக தனது மூன்றாவது படமாக ‘நிலவுக்கு என் மேல் என்னடி கோபம்’ என்ற படத்தை இயக்கியுள்ளார். இதில் கதாநாயகனாக அவரது அக்கா மகன் பவிஷ் அறிமுகமாகிறார்.
அவருடன் இணைந்து அனைகா சுரேந்திரன், மேத்யூ தாமஸ், பிரியா பிரகாஷ் வாரியர், சரத்குமார் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜி.வி. பிரகாஷ் இசையமைக்கும் இந்த படத்தை வுண்டர்பார் பிலிம்ஸ் மற்றும் ஆர். கே. புரொடக்ஷன்ஸ் ஆகிய இரண்டு நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கின்றன.
இந்த படம் பிப்ரவரி 7ம் தேதி திரையரங்குகளில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், தற்போது அஜித் குமார் நடித்த ‘விடாமுயற்சி’ படம் பிப்ரவரி 6ம் தேதி வெளியிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளதால், நிலவுக்கு என் மேல் என்னடி கோபம் ஒரு வாரம் முன்னதாக ஜனவரி 30ம் தேதி வெளியாகும் வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது.