மலையாள இயக்குனர் கீது மோகன்தாஸ் இயக்கத்தில் கே.ஜி.எப் பட புகழ் யஷ் ‘டாக்சிக்’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதை விஜய்யின் ஜன நாயகன் படத்தை தயாரிக்கும் கே.வி.என் நிறுவனம் தயாரிக்கின்றனர். நடிகை நயன்தாராவும் யஷ்-ன் அக்கா கதாபாத்திரத்திலும் கதாநாயகியாக கியாரா அத்வானி மற்றும் முக்கிய வேடத்தில் ஹியூமா குரேஷி நடிக்கின்றனர்.

இப்படம் நேரடியாக கன்னடம் மற்றும் ஆங்கிலம் என இரு மொழிகளில் படமாக்கப்படும் நிலையில், மற்ற இந்திய மொழிகளில் டப்பிங் செய்து வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது. இப்படம் 2026ம் ஆண்டு மார்ச் 19ம் தேதி அன்று வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த படத்திற்கு தற்போது வரை இசையமைப்பாளர் யார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படவில்லை. இந்நிலையில் தற்போது இப்படத்தில் இசையமைப்பாளராக அனிருத் இணைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதன் மூலம் கன்னட திரையுலகில் அனிரூத் இசையமைக்கும் முதல் படம் இதுவாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.