நடிகர் சிவகுமார் சமீபத்தில் ஒரு பேட்டியில், மறைந்த மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தை பகிர்ந்துகொண்டார்.
அவர், “மக்கள் திலகம் எம்.ஜி.ஆர். என்றாலே பிறருக்கு வாரி வழங்குபவர் என்று அனைவருக்கும் தெரியும். புகழ் பெற்ற நடிகராக இருந்தபோதும், முதலமைச்சர் ஆன பிறகும்.. இறுதிவரை அப்படித்தான் இருந்தார். அப்போதெல்லாம் அவர் செல்வாக்காக இருந்த காலகட்டம். ஆனால் பெரிய அளவு செல்வாக்கு இல்லாத நிலையிலேயே பிறகுக்கு அள்ளித்தரும் வள்ளலாகவே இருந்தார்.
அவர், திரையுலகில் ஓரளவு பிரபலமடைந்து இருந்த நேரம். அப்போதே அவரது வள்ளல் குணம் மக்களை சென்றடைந்து இருந்தது. ஆகவே தினமும் யாராவது சிலர் வந்து உதவி கேட்டு நிற்பார்கள். ஸ்டுடியோவில் இருந்து அவர் கார் வெளியே வந்ததும் சூழ்ந்து கொள்வார்கள்.
• காரில் வலம் வந்தாலும், முக்கியமான நடிகராக வளர்ந்துகொண்டு இருந்தாலும் பொருளாதாரத்தில் பெரிய அளவில் அவர் வளராத காலம் அது. ஆனாலும் தன்னை நம்பி வருவர்கள் ஏமாந்து விடக்கூடாது என நினைத்து, தன்னிடம் இருக்கும் பணத்தை எல்லாம் கொடுத்துவிடுவார். அதனால்தான் அவர் எட்டாவது வள்ளல் என போற்றப்படுகிறார்” என நெகிழ்ந்து கூறினார் சிவகுமார்.