பிரபல நடிகரும், ஆந்திர மாநிலத்தின் துணை முதல்வருமான பவன் கல்யாண் தற்போது தனது நடிப்பு வேலைகளை முடித்துவிட்டு சினிமாவிலிருந்து ஓய்வு பெற உள்ளார் என சமீபத்தில் ஒரு தகவல் வெளியானது. அரசியல் பணிகளில் முழுமையாக ஈடுபடவே அவர் இவ்வாறு முடிவெடுத்துள்ளார் என ஆந்திர அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ஆனால், சமீபத்தில் நடைபெற்ற ஒரு பேட்டியில் பவன் கல்யாண், “நடிப்பை தொடர்வேன்” என தெரிவித்துள்ளார்.

“எனக்கு பணம் தேவைப்படும் வரை நான் சினிமாவில் தொடர்ந்து நடிப்பேன். அதே நேரத்தில், என் அரசியல் மற்றும் அரசு சார்ந்த பணிகள் எந்தவிதத்திலும் பாதிக்கப்படக்கூடாது என்பதையும் உறுதி செய்வேன்,” என்று அவர் கூறியுள்ளார்.
தற்போது பவன் கல்யாண் ‘ஹரிஹர வீர மல்லு’ என்ற படத்தில் தனது நடிப்பை முடித்துள்ளார். இந்த படம் மே மாதம் 9ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. அதனைத் தொடர்ந்து ‘ஓஜி’ என்ற மற்றொரு படத்தில் அவர் இன்னும் தனது நடிப்பை முடிக்க வேண்டியிருக்கிறது. ‘உஸ்தாத் பகத் சிங்’ என்ற படத்தின் படப்பிடிப்பு சில நாட்கள் மட்டுமே நடைபெற்று முடிந்திருக்கிறது. மேலும், சில படங்கள் தற்போது பேச்சுவார்த்தை நடைப்பெற்று வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.