Touring Talkies
100% Cinema

Monday, March 10, 2025

Touring Talkies

தனிமையே நிம்மதியான வாழ்க்கை என உணர்கிறேன்… திருமணம் குறித்த மனம் திறந்த நடிகை ஷோபனா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

நடிகை ஷோபனா தென்னிந்திய திரைத்துறையின் பிரபலமாக இருந்தாலும், இந்திய சினிமா முழுவதும் பரிச்சயமானவராக உள்ளார். நடிகை மட்டுமல்லாமல், இந்தியாவின் தலைசிறந்த பரதநாட்டியம் பள்ளியையும் நடத்தி வருகிறார். இதன் மூலம் பலருக்கும் இலவசமாக பரதநாட்டியத்தை கற்றுக் கொடுத்து வருகிறார். இதற்கிடையில், அவ்வப்போது சில படங்களிலும் நடித்து வருகிறார்.

கடந்த ஆண்டு இவர் நடித்த ‘கல்கி 2898 ஏ.டி’ திரைப்படம் வெளியானது. இதில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். சமீபத்தில் நடிகை ஷோபனா பத்ம பூஷன் விருதையும் பெற்றுள்ளார்.

இவர் திருமணம் செய்யாததற்கான காரணத்தை சமீபத்தில் அவரே வெளிப்படுத்தினார். தனிமையாக வாழ்வது தான் தனக்கு மிகவும் பிடித்ததாகவும், திருமணத்தின் மீது தமக்கு ஈர்ப்பு இல்லை என்றும், தனிமையே நிம்மதியான வாழ்க்கை என உணர்கிறேன் என்றும் அவர் கூறியுள்ளார். அவருடைய இந்த பதில் பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது. ஷோபனா ஒரு பெண் குழந்தையை தத்தெடுத்து வளர்த்து வருகிறார்.

- Advertisement -

Read more

Local News