Saturday, July 27, 2024

சி.வி.குமார் தயாரிக்கும் ‘ஹைனா’ படம்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் சி.வி.குமார் தயாரிப்பில், அறிமுக இயக்குநர் பிரஷாந்த் சந்தர் இயக்கத்தில் உருவாகும் பரபரப்பான திரில்லர் படம் ‘ஹைனா.’

இந்த ஹைனா’ படத்தில் பிரஜன், அருண், ரியா, பிரியாலயா, லிப்ரா ரவீந்திரன், ரித்திகா, ஷோபனா, சைவம் ரவி, ரிஸு உள்ளிட்டோர் நடிக்கின்றனர்.

ஒளிப்பதிவு – ஏ.எஸ்.சூர்யா, எழுத்து – நிர்மல் குமார். கலை இயக்கம் – எஸ்.கே.,  படத் தொகுப்பு – பி.கே., சண்டை பயிற்சி இயக்கம் – ராஜேஷ் கண்ணன், இசை – ஹரி, ஆடை வடிவமைப்பு – ரெபேக்கா, பத்திரிகை தொடர்பு – நிகில் முருகன்.

இந்தப் படத்தை இயக்கவிருக்கும் இயக்குநரான பிரஷாந்த் சந்தர், தயாரிப்பாளர்-இயக்குநர் சி.வி.குமாரிடம் ‘கேங்ஸ் ஆஃப் மெட்ராஸ்’ படத்தில் இணை இயக்குநராக பணியாற்றியுள்ளார்.

இந்தப் படம் பற்றி இயக்குநர் பிரஷாந்த் சந்தர் கூறுகையில், “ஹைனா’ என்றால் வேட்டையாடும் மிருகமான கழுதைப் புலி என்பதால், பெயருக்கேற்றார் போல் போல் திடீர் திருப்பங்களுடன் கூடிய விறுவிறுப்பான திரில்லர் படமாக இந்தப் படம் அமையவுள்ளது. படத்தின் மூலக்கதை மாயையை மையப்படுத்தி இருக்கும்.

“எனது குருநாதரின் தயாரிப்பிலேயே முதல் படத்தை இயக்குவது மிகவும் பெருமையாக உள்ளது. திருக்குமரன் என்டர்டெயின்மென்ட் தயாரிப்பு நிறுவனத்தின் இரண்டாவது தசாப்தத்தில் இது மிக முக்கியமான படமாக இருக்கும்…” என்றார்.

இந்த ‘ஹைனா’ படத்தின் பூஜை சமீபத்தில் நடைபெற்றது.  இப்படத்தினை சமத்துவ மக்கள் கழக இளைஞரணி தலைவர் கார்த்திக் நாராயணன் குத்து விளக்கேற்றி, கிளாப் அடித்து துவக்கி வைக்க, வி ஸ்கொயர் என்டர்டெயின்மென்ட் விஸ்வநாதன் விழாவில் கலந்து கொண்டு குழுவினரை வாழ்த்தினார். 

இந்த ‘ஹைனா’ படத்தின் படப்பிடிப்பு விரைவில் தொடங்கவுள்ளது.

- Advertisement -

Read more

Local News