Monday, March 10, 2025

Touring Talkies

என்னை இத்தனை நாட்கள் குழந்தை போல பார்த்துகொண்டார்…சரத்குமார் குறித்து நெகிழ்ந்த ராதிகா!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பிரபல நடிகை ராதிகா சமீபத்தில் அறுவை சிகிச்சை மேற்கொண்டுள்ளார். இதனையடுத்து, மருத்துவமனையில் இருக்கும் அவரது புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. சினிமா, சின்னத்திரை என இரண்டிலும் முக்கிய இடத்தை பெற்றிருக்கும் ராதிகா, தற்போது நடிப்பு மற்றும் அரசியல் என இரண்டிலும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், அவருக்கு அறுவை சிகிச்சை நடத்தப்பட்டுள்ளது. இதுகுறித்து சோஷியல் மீடியாவில் பதிவு செய்துள்ள ராதிகா,”நான் எப்போதும் எனது வாழ்க்கையையோ அல்லது வேலைகளையோ அதிகமாக பேசுவதில்லை. ஆனால் கடந்த இரண்டு மாதங்களாக எனக்கு மிகவும் கடினமான அனுபவமாக இருந்தது. படங்களில் நடிக்கும்போது காலில் அடிபட்டது. மாத்திரைகள், பிசியோதெரபி எதுவும் பலனளிக்கவில்லை. மருத்துவர்கள் பரிந்துரையின்படி அறுவை சிகிச்சை மேற்கொண்டேன். எனது குடும்பம் முழுமையாக ஆதரவாக இருந்தது.” என தெரிவித்துள்ளார்.

அதேபோல், “என் வாழ்க்கையின் மிகப்பெரிய தூண், என் வலிமை மற்றும் தங்க இதயமுள்ள சரத்குமார், கடந்த இரண்டு மாதங்களாக குழந்தையைப் போல என்னை கவனித்து வந்தார். இந்த மகளிர் தினத்தின்போது, ஒவ்வொரு பெண்மணியும் தன்னைத்தான் முன்னிலைப்படுத்திக் கொள்ளவும், அதிகம் நேசிக்கவும், பாராட்டிக்கொள்ளவும் கவனம் செலுத்த வேண்டும் என்று விரும்புகிறேன்.” என கூறி, உலக மகளிர் தினத்திற்கான வாழ்த்துக்களையும் தெரிவித்துள்ளார்.

- Advertisement -

Read more

Local News