Wednesday, April 10, 2024

நடிகராக கலக்கும் கிரிக்கெட்டர் ஹரிஷங்கர் !

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

இயக்குநர் அருண்ராஜா காமராஜ் இயக்கத்தில், டிஸ்னி+ ஹாட்ஸ்டார்  வெளியீடாக வெளியான “லேபில்” சீரிஸில், புதுமுக நடிகர் ஹரிஷங்கர் அனைவரையும் ஈர்த்துள்ளார். கிரிக்கெட்டராக ஐபிஎல் போட்டிகளில் வலம் வந்தவர் தற்போது, நடிகராகக் கலக்கி வருகிறார்.

இளம் நடிகராக வலம் வரும் ஹரிஷங்கர், ஒரு கிரிக்கெட்டராக தன் வாழ்வைத் தொடங்கியவர்.  அண்டர் 19 பிரிவில் ஜீனியர் நேஷனல் போட்டிகளில் விளையாடிப் புகழ் பெற்றவர், கிரிக்கெட் அனலைசராக ஐபிஎல்லில் மும்பை அணியில், பல போட்டிகளில் பணிபுரிந்துள்ளார். சச்சின் விளையாடிய இறுதிப்போட்டி முதலாக,  பல போட்டிகளில் மும்பை அணிக்குச் சிறப்பான அனலைசராக பணியாற்றியுள்ளார். மேலும் ஒலிம்பிக் போட்டிகளில் இந்தியா சார்பாக ஸ்போர்ட்ஸ் அனலைசராகவும்  பணியாற்றியுள்ளார். ஸ்போர்ட்ஸில் கலக்கிய நிலையில்  திரைத்துறையில் நடிகராக தற்போது நுழைந்துள்ளார்.

தொலைக்காட்சியில் நடிகராக அறிமுகமான இவர்  கலர்ஸ் தொலைக்காட்சியின் அம்மன்,  மாங்கல்ய சபதம் , விஜய்  டி.வி காற்றுக்கென்ன  வேலி தொடர்களில் நடித்தார். பின்னர் சினிமாவிற்காக தன்னை முழுதாக 2 வருடங்கள் தயார் செய்து கொண்டவர்.  மாயத்திரை, டிரைவர் ஜமுனா, பட்டாம்பூச்சி, படங்களில் துணைக்காகப்பாத்திரங்களில் நடித்தார். லேபில் சீரிஸ் அவருக்கு மிகப்பெரும் திருப்புமுனையாக அமைந்துள்ளது. அவரது நடிப்பை, பலரும் பாராட்டி வருகிறார்கள். திரைத்துறை பிரபலங்களிடம் பாராட்டுக்களைக் குவித்து வரும் ஹரிசங்கருக்கு, பல புதிய வாய்ப்புகள் குவிந்து வருவது  குறிப்பிடத்தக்கது.

- Advertisement -

Read more

Local News