Saturday, September 21, 2024

BIGG BOSS-6 நிகழ்ச்சியிலிருந்து ஜி.பி.முத்து வெளியேறினார்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் தற்போது ஒளிபரப்பாகிக் கொண்டிருக்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியின் 6-வது சீஸனில் இன்றைக்கு புதிய திருப்பமாக முக்கிய வேட்பாளரான ஜி.பி.முத்து போட்டியில் இருந்து தானாகவே வெளியேறினார்.

ஜி.பி.முத்து டிக்டாக்கில் தனது அப்பாவித்தனமான பேச்சுக்கள் அடங்கிய வீிடியோக்களை வெளியிட்டதன் மூலமாக தமிழகத்தில் மிகவும் பிரபலமானார். அவர் இந்த பிக்பாஸ் 6-வது சீஸனில் நுழைந்ததில் இருந்தே பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு மேலும் கூடுதலான பார்வையாளர்கள் கிடைத்தார்கள்.

கடந்த 2 வாரங்களுக்கு முன்பாக ஆரம்பித்த இந்த பிக்பாஸ் நிகழ்ச்சியில் சில நாட்கள் மட்டுமே தனது யதார்த்த பேச்சுக்களால் உடன் இருந்த போட்டியாளர்களை சமாளித்து வந்த ஜி.பி.முத்துவுக்கு சமீப நாட்களாக தனது குடும்பத்தின் மீது அக்கறையும், பாசமும், தவிப்பும் ஏற்பட்டது. அதிலும் தனது மகன் தன்னைக் காணாமல் தவிப்பான் என்று புலம்ப ஆரம்பித்தார்.

இதையடுத்து 2 முறை அவரை கன்பெக்சன் அறைக்கு அழைத்து பிக்பாஸ் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தார். ஆனாலும் முத்து மனம் மாறாமல் நேற்றைக்கு சாப்பிடாமலேயே இருந்துவிட்டார். இதையறிந்த பிக்பாஸ் மீண்டும் அவரை அழைத்து அறிவுரை சொல்லி அனுப்பி வைத்திருந்தார்.

இன்றைக்கு வார இறுதி நாள் என்பதால் பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு வந்திருந்த நடிகர் கமல்ஹாசன் ஜி.பி.முத்துவை கன்பெக்சன் அறைக்கு அழைத்து பேசினார். அப்போதும் ஜி.பி.முத்து தான் வீட்டுக்குச் செல்ல வேண்டும் என்பதில் உறுதியாக இருந்தார். இதையடுத்து அவரை பிக்பாஸ் அரங்கத்தில் இருந்து வெளியேற அனுமதித்தார் கமல்ஹாசன்.

தொடர்ந்து உள்ளேயிருந்த சக போட்டியாளர்களிடமும் ஜி.பி.முத்து போட்டியில் இருந்து வெளியேறதையும் தெரிவித்தார் கமல்ஹாசன். அனைவருமே அதிர்ச்சியாகிவிட்டனர். “நல்ல போட்டியாளரை இழந்துவிட்டோம் என்பதைவிடவும் சிறந்த அப்பாவை அனுப்பி வைத்திருக்கிறோம் என்று நாம் பெருமைப்படுவோம்…” என்று சொல்லி அவர்களை சமாதானப்படுத்தினார் கமல்ஹாசன்.

- Advertisement -

Read more

Local News