Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

நடன இயக்குனர் சாண்டி நடிக்கும்  ’ரோசி’ ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நடன இயக்குனராக பணியாற்றியவர்  சாண்டி விஜய் நடிப்பில் வெளியான ‘லியோ’ படத்தில் நடித்திருந்தார். சைக்கோ கதாபாத்திரத்தில் அவரின் நடிப்பு பலரின் கவனத்தையும் ஈர்த்தது. இந்நிலையில், சாண்டி தற்போது கன்னட திரையுலகில் நடிகராக அறிமுகமாக உள்ளார். கன்னட இயக்குநர் ஷூன்யா இயக்கும் புதிய படம் ‘ரோசி’. நடிகர் யோகேஷ் நடிக்கும் இப்படத்துக்கு குருகிரண் இசையமைக்கிறார். இப்படத்தில் ஆண்டாள் கதாபாத்திரத்தில் நடிகர் சாண்டி நடிக்கிறார். அவரது தோற்றத்துடன் கூடிய ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டுள்ளது.

 

பெண் தோற்றத்தில் டெரரான லுக்கில் சிவப்பு வண்ணம் தெறிக்கும் இந்தப் படத்தின் போஸ்டர் ரசிகர்களின் மத்தியில் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்துள்ளது.  இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குநர் லோகேஷ் கனகராஜ் தனது எக்ஸ் தள பக்கத்தில் வெளியிட்டு, “ஒரு நடிகராக உங்களின் இந்த புதிய பாதை மகிழ்ச்சி அளிக்கிறது. உங்களுக்கும் படக்குழுவுக்கு வாழ்த்துகள்” என பதிவிட்டுள்ளார்.

- Advertisement -

Read more

Local News