Friday, August 16, 2024

‘சந்திரமுகி 2’ : வேட்டையன்  பராக்!

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

பி.வாசு இயக்கத்தில் ரஜினி நடித்து பெரிய ஹிட் அடித்த திரைப்படம் சந்திரமுகி. தற்போது இதன் இரண்டாம் பாகத்தை அவரே இயக்குகிறார். ரஜினி நடித்த வேடத்தில் ராகவா லாரன்ஸ் நடிக்கிறார். இதனால் படத்துக்கு எதிர்பார்ப்பு அதிகரித்து உள்ளது.

இதில் ராகவா லாரன்ஸுடன், பாலிவுட் நடிகை கங்கனா ரனாவத், வடிவேலு, மகிமா நம்பியார், லட்சுமி மேனன், சிருஷ்டி டாங்கே, உள்ளிட்ட பலர் நடித்திருக்கிறார்கள். ஆர். டி. ராஜசேகர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்த திரைப்படத்திற்கு கீரவாணி இசையமைத்து இருக்கிறார் தோட்டா தரணி கலை இயக்கத்தை கவனிக்க, பட தொகுப்பு பணிகளை ஆண்டனி மேற்கொண்டு இருக்கிறார்.

லைக்கா புரொடக்ஷன்ஸ் பிரம்மாண்டமான பொருட்செலவில் தயாரித்திருக்கிறது.  இந்த திரைப்படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய ஐந்து மொழிகளில் எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி தினத்தன்று திரையரங்குகளில் வெளியாகிறது.

இந்நிலையில் படத்தில் வரும் வேட்டையன் கதாபாத்திரத்தின் பர்ஸ்ட்  லுக் போஸ்டர் வெளியாகி உள்ளது.

இது படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்து உள்ளது.

- Advertisement -

Read more

Local News