Touring Talkies
100% Cinema

Friday, March 14, 2025

Touring Talkies

“பா.ரஞ்சித்திற்கும், இந்தப் படத்துக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை” – மறுக்கிறார் இயக்குநர்

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

Passion Studios சுதன் சுந்தரம் மற்றும் G.ஜெயராம் தயாரிப்பில் பிரபு ஜெயராம் இயக்கியுள்ள ‘என்னங்க சார் உங்க சட்டம்’ திரைப்படம், வரும் அக்டோபர் 29-ம் தேதியன்று Sony Liv ஓடிடி தளத்தில் பிரத்யேகமாக வெளியாகிறது.

படத்தில் R.S.கார்த்திக். ஐரா, பகவதி பெருமாள், ரோகினி, ஜூனியர் பாலையா, சௌந்தர்யா பாலா நந்தகுமார், தான்யா, எல்வின் சுபா, கயல் வின்சண்ட், பர்கத் பிரோஷா, மீரா மிதுன், மெட்ராஸ் மீட்டர் கோபால், விஸ்வந்த், நக்கலைட்ஸ் தனம் ஆகியோர் படத்தில் நடித்துள்ளனர்.

இசை – குணா பாலசுப்ரமணியம், ஒளிப்பதிவு – அருண் கிருஷ்ணா, படத் தொகுப்பு – பிரகாஷ் கருணாநிதி, கலை இயக்கம் – Teejay, பாடல் வரிகள் – கார்த்திக் நேத்தா, ஜெகன் கவிராஜ், ரஞ்சித், M.S. முத்து, திவ்யா லக்‌ஷனா, ஸ்வேதா, ராஜு, ஒப்பநை – தேஜா, ஒலிப்பதிவு – கிருஷ்ணன் சுப்ரமணியம், பாடியவர்கள் – பென்னி தயால், வினீத் ்ரீனிவாசன், குணா பாலசுப்ரமணியம், மால்வி சுந்தரேஷன், பத்மபிரியா ராகவன், அஹானா கிருஷ்ணன், டப்பிங் இன்ஜீனியர் – அருண் உமா, ஸ்டில்ஸ் – ராம் பிரசாத், டி.ஐ. – ்ரீராம் மக்கள் தொடர்பு – சுரேஷ் சந்திரா, ரேகா D’One -மக்கள் தொடர்பு.

அனைத்து ஜாதியினரும் அர்ச்சகர் ஆகலாம் என்ற சிறப்பான திட்டத்தை தமிழக அரசு சமீபத்தில் நடைமுறைப்படுத்தியுள்ளது. “என்னங்க சார் உங்க சட்டம்” என்ற இந்தத் திரைப்படமும் இதே கதைக் கருவில்தான் உருவாகியுள்ளது.

படத்தின் முதல் பகுதி முழுக்க முழுக்க பொழுதுபோக்கு தன்மையுடன் கூடிய காதல் மற்றும் காமெடி கலந்ததும், இரண்டாம் பகுதி ஜாதியினால் தமிழ்ச் சமூகத்தில் ஏற்பட்டிருக்கும் பல்வேறுவிதமான பிரச்சனைகள் திவிரமாக சொல்வதாக படமாக்கப்பட்டுள்ளது.

இப்படத்தின் சிறப்பு திரையிடல் பத்திரிக்கையாளர்களுக்காக திரையிடப்பட்டு பாராட்டுக்களை பெற்றது. இதனை தொடர்ந்து, படக் குழுவினர் பத்திரிக்கையாளர்களை சந்தித்து பேசினார்கள்.

இந்த விழாவில் படம் பற்றி இயக்குநர் பிரபு ஜெயராம் பேசும்போது, “கமர்ஷியலாக ஒரு கதையை சொல்ல நினைக்கும் இயக்குநரான ஒருவன், சீரியஸாக ஒரு கதை சொல்ல முயற்சிப்பதாகத்தான் இந்த திரைக்கதையை அமைத்திருக்கிறேன். 1990 கிட்ஸ்களுக்கான படமாகத்தான் இதை எடுத்திருக்கிறோம்.

பொருளாதார அடிப்படையில் இட ஒதுக்கீடு கிடைக்க வேண்டும் என்று சொல்லவில்லை. இட ஒதுக்கீட்டில் தேவை உள்ளோர்களுக்கும் கிடைக்க வேண்டும் என்றுதான் இதை சொல்லியிருக்கிறோம். எல்லா ஜாதியினரும் அர்ச்சகராகலாம் என்பதை நான் வரவேற்கிறேன். அதையும் இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறேன். இந்தப் படத்தில் கதாப்பாத்திரங்களின் பின்னணியைத்தான் சொல்லியிருக்கிறேன்.

ொரு தாழ்த்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து, கோபத்துடன் அவரது நியாயத்தை சொல்லும் பாத்திரத்திற்கு என்ன பெயர் வைக்கலாம் என்று யோசித்தபோது, ரஞ்சித் சார் பெயர் வைக்கலாம் என தோன்றியது. அதனால்தான் படத்தில் ஒரு கதாபாத்திரத்திற்கு ரஞ்சித் தாசன் என்று பெயர் வைத்தோம். இதைத் தவிர, ரஞ்சித் சாருக்கும் இந்தப் படத்திற்கும் வேறு எந்த சம்பந்தமுமில்லை…” என்றார்.

- Advertisement -

Read more

Local News