பீறிட்டு வந்த இரத்தம்! விஜயகாந்த் செய்த காரியம்!

12 வருடங்களாக விஜயகாந்திற்கு உதவியாளராக இருந்த துரைராஜ் என்பவர்  ஒரு சம்பவத்தை பகிர்ந்து கொண்டார்.

“விஜயகாந்த் பரதன் படப்பிடிப்பின் போது அதற்கான காட்சிகளை எடுத்துக் கொண்டிருந்தார்கள். அது, ஜெயிலில் இருந்து அவர் தப்பித்து வருகிற காட்சி.

 அடுத்து, ஒரு குவாரியில் இருந்து கடகடவென கீழே உருண்டு வருகிற காட்சி. அதில் கம்பெனி ஆர்ட்டிஸ்ட் ஒருவருக்கு கல் குத்தி காலில் இரத்தம் பீறிட்டு வந்துவிட்டது. யாரும் அதை கவனிக்கவில்லை.

ஆனால் விஜயகாந்த் அதை பார்த்துவிட்டார்.  உடனே அந்த நபரை தன் காரில் தூக்கிக் கொண்டு வந்து மருத்துவமனைக்கு கொண்டு போக முயற்சித்தார்.  ஆனால் அதற்குள் பக்கத்தில் இருந்த அனைவரும் அவரை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம் என்று சொல்லிவிட்டார்கள்.  அதன் பிறகு தான் தெரிந்தது,  விஜயகாந்திற்கும் கல் குத்தி இரத்தம் வந்தது.

ஆனால் தன்னைப் பற்றி கவலைப்படாமல், அடுத்தவருக்கு உவினார் விஜயகாந்த்” என்றார் அந்த உதவியாளர்.