Touring Talkies
100% Cinema

Wednesday, May 14, 2025

Touring Talkies

யுஏ சான்றிதழ் பெற்ற டிராகன்… படத்தின் நீளம் எவ்வளவு தெரியுமா?

Share

- Advertisement -
- Advertisement -
- Advertisement -

கோமாளி படத்தில் இயக்குனரான பிரதீப் ரங்கநாதன், அதன் பிறகு லவ் டுடே படத்தை இயக்கி நடித்திருந்தார். 5 கோடி பட்ஜெட்டில் உருவான அந்த படம் 100 கோடி வசூல் செய்தது. இந்த நிலையில் தற்போது அவர் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் டிராகன் என்ற படத்தில் நடித்துள்ளார். 

இப்படத்தில் அவருடன் அனுபமா பரமேஸ்வரன், கையடு லோகர், ஜார்ஜ் மரியன், கே.எஸ் .ரவிக்குமார், கௌதம் மேனன், மிஷ்கின், சினேகா உள்ளிட்ட ஒரு முக்கிய வேடங்களில் நடித்திருக்கிறார்கள். இப்படம் வருகிற பிப்ரவரி 21ஆம் தேதி திரைக்கு வருகிறது.

இந்த நிலையில் தற்போது டிராகன் படத்தை பார்த்த சென்சார் போர்டு அதிகாரிகள் படத்திற்கு யுஏ சான்றிதழ் கொடுத்துள்ளார்கள். மேலும், இந்த படத்தின் ரன்னிங் டைம் இரண்டு மணி நேரம் 35 நிமிடங்கள் என்ற தகவலும் தற்போது வெளியாகி இருக்கிறது.

- Advertisement -

Read more

Local News