“சிகரெட் குடிக்காதீங்க!”: ரஜினிக்கு அட்வைஸ் செய்த ‘மைக்கல்’ பட ஹீரோ!

இன்று வெளியாகி இருக்கும் மைக்கேல் படத்தின் நாயகனான சந்தீப் கிஷான் ரஜினியுடனான தனது அனுபவம் ஒன்றை பகிர்ந்து இருக்கிறார்.

“நான் சிறுவனாக இருந்த போது, சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் ரஜினிகாந்த் ஒரு படப்பிடிப்பில் இருந்தார். என்னுடை வீட்டு அருகே உள்ள நபர் அங்கே நடந்து கொண்டிருந்த படப்பிடிப்பில் நடன கலைஞராக இருந்தார். அவருடன் நான் சென்றிருந்தேன்.

அப்போது ரஜினிகாந்திடம் சென்று “அங்கிள் சிகரெட் பிடிப்பதை விட்டு விடுங்கள்” என்று கூறினேன். ரஜினி என்னை ஆச்சரியத்துடன் பார்த்து சிரித்தார்” என்று தனது பழைய அனுபவத்தை பகிர்ந்துகொண்டு இருக்கிறார் சந்தீப் கிஷான்.